Thursday, December 27, 2007

இயேசு கிறிஸ்த்துவின் சிலுவை மரணத்தின் முக்கிய நோக்கம்.

அன்பு விசுவாசிகளே இனி நான் எழுதப்போகும் காரியங்கள் உங்களுக்கு சற்று மாறுபாடாக தெரியலாம் ஆனால் நான் எந்த ஒரு குறிப்பிட்ட சபை உபதேசத்தை வைத்தோ அல்லது யார் சொல்வதையும் கேட்டோ இதை எழுதவில்லை எல்லாமே இறைவன் எனக்கு நேரடியாக தெரியப்படுத்திய வார்த்தைகள் மேலும் நான் எழுதும் எல்லா செய்திகளுக்கும் வசன ஆதாரம் உள்ளது அதையும் தருகிறேன்.
.

நான் புதிய ஏற்பாட்டு உபதேசத்துக்கோ அல்லது பவுல் அப்போஸ்தலரின் உபதேசங்களுக்கோ எதிரானவன் அல்ல. பவுல் அவர்களின் தன்னலம் பாராத கடின உழியத்தின் காரணமாகத்தான் இன்று உலகில் கிறிஸ்தவம் என்பது மிகப்பெரிய மதமாக உருவெடுத்துள்ளது என்பதில் ஐயமில்லை. புதிய ஏற்பாட்டு வழியில் பரிசுத்த ஆவியை பெற்று பரிசுத்தமாக வாழ்பவர்கள் இயேசு கிறிஸ்துவின் பரலோக ராஜ்யம் போய் சேர்வார்கள் என்பதையும் நான் மறுக்கவில்லை

ஆனால்

.

இந்த ஒரே ஒரு வழியை மட்டும், அதுவும் எல்லோரையும் கரை சேர்க்க முடியாத வழியை மட்டும் உருவாக்க இயேசு வரவில்லை என்பதுதான் இறைவன் எனக்கு தெரிவித்த மிகப்பெரிய உண்மை.

.
வேதபுத்தகத்தில் உள்ளதெல்லாம் இறைவனின் வார்த்தைகள் அல்ல:.

வேத புத்தகம் முழுவதும் ஆவியானவரால் ஏவப்பட்டு எழுதப்பட்ட போதிலும் அதில் உள்ள எல்லா வார்த்தைகளும் இறைவனின் வார்த்தைகள் என எடுத்துக்கொள்ள முடியாது உதரணமாக,

 • சாராய் ஆபிரகாமை நோக்கி என் அடிமை பெண்னோடே சேரும் (ஆதி:16:2)
 • யோசேப்பின் சகோதரர் சொன்ன "நாம் அவனை கொன்று இந்த குழிகள் ஒன்றிலே அவனை போட்டு" (ஆதி 37:20)
 • இஸ்ரவேல் ஜனங்கள் சொன்ன "எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்காக உண்டுபண்ண வேண்டும்" (யாத்:32:1)
 • தாவீது சொன்ன "மும்முரமாக நடக்கும் போர் முகத்திலே உரியாவை நிறுத்தி அவன் வெட்டுண்டு சாகும்படிக்கு பின் வாங்க வேண்டும்" (IIசாமு:11:15)

இதுபோல் வேத புத்தகம் முழுவதும் இறைவனால் சொல்லப்படாத நமக்கு திருஷ்டாந்திரமாக எழுதப்பட்ட அனேக வார்த்தைகள் உள்ளது.

.
இதை நான் ஏன் எழுதுகிறேன் என்றால் வேதத்தில் இருக்கிறது என்பதற்காக அது இறைவனின் வார்த்தை என்று ஆகிவிடாது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்க்காகத்தான்.

.
நல்ல வார்த்தைகள் வேறு இறைவனின் வார்த்தைகள் வேறு
நான் உங்கள் அனைவரிடமும் கேட்கும் ஒரு கேள்வி என்னவென்றால் இன்று பூமியில் விசுவாசிகளில் அனேகருக்கு பவுல் அப்போஸ்தலருக்கு வெளிப்படுத்தியது போல இயேசு தன்னை வெளிப்படுத்திஇருக்கிறார். மேலும் யோவேல் தீர்க்கதரிசி சொன்னது போல அநேகரை தனது பரிசுத்த ஆவியால் அபிஷேகம் பண்ணிவுள்ளார், பலருக்கு சொப்பனங்களும் தரிசனங்களும் காட்டப்படும். ஏன் உங்களுக்கு கூட அப்படி நடந்திருக்கலாம் அதற்காக நீங்கள் சொல்வது எழுதுவது எல்லாம் பரிசுத்த ஆவியானவரின் வார்த்தைகள்தான் என எடுத்துக்கொள்ள முடியாது.
.
சகோதரர் தினகரன் அவர்கள் நடத்தும் கூட்டங்களுக்கு திரளான மக்கள் வருகின்றனர் அனேக அதிசய அற்புதம் நடக்கிறது என்பதற்க்காக அவர் சொல்வதெல்லாம் பரிசுத்த ஆவியானவரின் வார்த்தைகள் ஆகிவிடாது. அவர் சொல்வது நல்ல வார்த்தைகளாக இருக்கலாம் அனேகருக்கு பயன்படலாம் அது நல்லதுதான் ஆனால் தேவனின் வார்த்தைகள் வேறு நல்ல வார்த்தைகள் என்பது வேறு.
.
உதாரணமாக சிகரெட் பிடிக்க கூடாது, காலையில் குளிக்க வேண்டும், கை கழுவி சாப்பிட வேண்டும், கடினமாக உழைக்க வேண்டும், நன்றாக படிக்க வேண்டும் போன்றவை நல்ல வார்த்தைகள்தான் ஆனால் அவைகள் தேவனின் வார்த்தைகள் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது.
.
எந்த மனிதனும் தொடர்ச்சியாக பல நாட்கள் ஆவியில் நிறைந்து எழுதவோ பேசவோ முடியாது. நமது சரீர தேவைகளுக்காக உலகத்தினுள் வந்துதான் ஆகவேண்டும். அப்பொழுது பிசாசு அதை பயன்படுத்தி இறைவனின் வார்த்தைகளுடன் அவனது வார்த்தைகளையும் சேர்த்துவிடுகிறான் அதன் மூலம் நம்மை திசை திருப்பி விடுகிறான். (மாமிச கிரியைகளால் தன்னை கெடுத்துக்கொண்ட அனேக பரிசுத்தவான்களை வேதத்தில் பார்க்கலாம் ஆபிரகாம் இஸ்மவேலை பெற்றது, தாவீது உரியாவை கொன்றது, சாலமோனின் மனைவிகள், சிம்சோன் நடபடிகள் போன்றவை) அதற்கு யாரும் விதி விலக்கல்ல. மாமிசத்தில் வாழும் வரை மனிதன் மனிதன்தான்.
.
எனவே நாம் வேதத்தில் உள்ள இறைவனின் உண்மையான வார்த்தைகள் எவைகள் என கண்டறிய வேண்டும். அல்லது நாம் வெகு சுலபமாக திசைதிருப்பப்படுவோம்.
.
இறைவனின் உண்மையான வார்த்தைகள் எப்படி அறிவது?
வேதத்தின் அடிப்படையாகிய பழைய ஏற்பாடு என்பது இறைவனின் நேரடி வார்த்தைகளால் நிறைந்துள்ளது அதிலும் மோசேயின் நியயபிரமாணம் கர்த்தரிடமிருந்து நேரடியாக பெறப்பட்டது தீர்க்கதரிசன புத்தகங்களில் கிட்டத்தட்ட 95% இறைவனின் நேரடி வார்த்தைகள்தான். "கர்த்தர் சொல்கிறார், கர்த்தர் உரைக்கிறார், கர்த்தரின் வாய் இதை சொல்லிற்று, கர்த்தர் என்னை நோக்கி, கர்த்தர் கட்டளையிட்டார் இப்படி கர்த்தரின் வாயாக இருந்து அவரை தரிசித்து தீர்க்கதரிசிகள் பேசியுள்ளனர். கோதுமைக்கு முன் பதர் எம்மாத்திரம் என்பதுபோல் அவர் வார்த்தைகளை மிக சுலபமாக கண்டறிய முடியும்.
.
அடுத்ததாக வரும் புதிய ஏற்பாட்டில் தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள் அவற்றை கேட்டவர்களால் எழுதப்பட்டுள்ளன. பழைய ஏற்பாட்டில் அனேக இடங்களில் தீர்க்கதரிசிகள் இயேசுவை முன்னறிவித்துள்ளனர். இயேசுவை பார்த்த யோவான் இதோ தேவ ஆட்டுக்குட்டி என சாட்சி கொடுத்தான். மேலும் "இவர் என் நேச குமாரன் இவருக்கு செவிகொடுங்கள்" என பிதா கட்டளையிட்டார் இவைகள் மட்டுமல்ல அவர் பேசியது போல் ஒருவரும் ஒருகாலும் பேசியது இல்லை என்ற மக்களின் சாட்சியே அவர் வார்த்தைகள் தேவ குமாரனின் வார்த்தைகள்தான் என ஈசியாக நாம் புரிந்துகொள்ளமுடியும். உண்மையில் அவர் பேசியதுபோல் இதுவரை யாரும் பேசியது கிடையாது.

.
முக்கியமாக, வேதத்தின் அடிப்படையாகிய பழைய ஏற்பாட்டில் உள்ள இறைவனின் நேரடி வார்த்தைகள் இயேசுவை முன்னறிவித்துள்ளன. அகவே நாம் இயேசுவின் வார்த்தைகளுக்கு செவிகொடுக்க கடமைப்பட்டுள்ளோம்.
ஆனால்
பரிசுத்த ஆவியானவர் உலகினுள் வந்த பிறகு யாருக்கும் இறைவனின் தனிப்பட்ட வார்த்தைகள் கொடுக்கப்படவில்லை. ஏனென்றால் அவர் ஏசுவை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்குள்ளும் அவர் வாசம் செய்வதால் அவரே நமக்கு எந்த ஒரு புது சத்தியத்தையும் போதிக்க முடியும்.
.
மேலும் பழைய ஏற்பாட்டில் உள்ள இறைவனின் நேரடி வார்த்தைகளோ அல்லது இயேசு கிறிஸ்துவோ எனக்குப்பின் ஆவியானவர் இப்படி பல வெளிப்பாடுகளை தருவார் அதை அப்படியே பின்பற்றுங்கள் என எங்கும் சொல்லவில்லை. "ஆவியானவர் சகல சத்தியத்துக்குள்ளும் உங்களை நடத்துவார்" என்றுதான் குறிப்பிட்டுள்ளாரே அன்றி யாருக்கும் வெளிப்பாடு கொடுத்து எழுதவைப்பார் என குறிப்பிடவில்லை.
.
மேலும் நிரூபங்கள் எழுதிய ஒவ்வொருவரும் இதை ஆவியானவர் எழுத சொல்கிறார் என்று சொல்லி சொல்லி எழுதவில்லை. மாறாக அனேக நிரூபங்களை எழுதிய பவுல் அவர்களே "என்னுள்ளும் தேவனுடைய ஆவி உண்டென்று எண்ணுகிறேன்" (Iகொரி:7:40) என சந்தேகமாகத்தான் கூறியுள்ளார். (சில இடங்களில் அவர் கர்த்தர் கட்டளையிட்டுள்ளார் என குறிப்பிடுவது எல்லாம் பழைய ஏற்பாட்டில் இறைவன் சொன்னவைகளே)
.
அதற்காக நிரூபங்களில் உள்ள வார்த்தைகள் எல்லாம் ஆவியானவரின் வார்த்தைகள் இல்லை என்றோ இறைவனின் வெளிபாடுகளே இல்லை என்றோ நான் சொல்லவரவில்லை.
.
நான் சொல்வதெல்லாம் நிரூபங்களில் உள்ள வார்த்தைகளில் ஆவியானவரின் வார்த்தைகளுடன் மனித எண்ணங்களும் கலந்து ஒரு பெரிய உண்மை மறைக்கப்பட்டிருக்கிறது.(உதாரணமாக சில இடங்களில் நிருபங்களை எழுதியவர்கள் "நானே சொல்கிறதாவது" "என் அபிப்ராயம்" (Iகொரி:7:12,25). நான் புத்திசொல்கிறது (II பேதுரு :5:1) என குறிப்பிட்டுள்ளார்கள் .
அல்லது
அந்த உண்மையை பற்றிய விளக்கத்தை புற ஜாதியருக்கு சுவிஷேசத்தை அறிவிக்கும் நோக்கத்தோடு இறைவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பவுலிடமோ மற்ற அப்போஸ்தலர்களிடமோ இறைவன் வெளிப்படுத்தாமல் கூட இருந்திருக்கலாம்
ஆனாலும்
நிரூபங்கள் சொல்வதும் இறைவனின் வழிகளில் ஒன்றும் அவைகளின் படி வாழ்ந்தால் அதாவது
"நான் கிறிஸ்துவை பின்பற்றுவது போல என்னை நீங்கள் பின்பற்றுங்கள்" என்றும், என்னைப்போல ஆகுங்கள் என்று உங்களுக்கு புத்தி சொல்கிறேன் என்றும் சொன்ன பவுல் அப்போஸ்தலர் அவர்களை போல நீங்களும் சரியாக நடந்தால் அதாவது
 • அவர் ஒரு சொந்த வீடு வைத்து நிலையாக வாழவில்லை
 • அவர் திருமணம் செய்துகொள்ள வில்லை
 • அவர் எதையும் தனக்காக சேர்த்து வைக்கவில்லை
 • அவர் எப்பொழுதும் இயேசுவுக்காக ஜீவனை கொடுக்க தயாராக இருந்தார்
 • அவர் உலக இன்பம் எல்லாவற்றயும் குப்பையாக நினைத்து ஒதுக்கினார்
 • அவர் இயேசுவின் சுவிசேஷம் ஒன்றே தன் உயிர் மூச்சாக நினைததார்அவர்
 • அவர் எல்லோரும் கழித்து போடும் அழுக்கை போல வாழ்ந்தார்
 • அவர் அடிபட்டு, வையப்பட்டு, நிர்வாணப்பட்டு சுவிசேஷம் சொன்னார்.
 • அவர் தனது உயிருக்காக ஒருபோதும் பயந்தது இல்லை.

நீங்கள் நல்ல ஓட்டத்தை ஓடினேன் என்று உறுதியாக சொல்ல முடியும் பரலோக ராஜ்யம் பொய் சேர முடியும் என்பதால் ஆவியானவர் அதை வேதத்துடன் சேர்க்க அனுமதித்துவிட்டார்

.

ஆனால் முன்பு நான் சொன்னதுபோல் அதுமட்டும்தான் முழுமையான இறைவனின் திட்டம் கிடையாது

.

நாம் செய்ய வேண்டியது என்னவென்றால் நிரூபங்களில் உள்ள வார்த்தைகளை அதற்கு முன்னால் உள்ள மற்ற வார்த்தைகளோடு ஒப்பிட்டு பார்க்கவேண்டும். ஏனென்றால் ரோமர் 3:2 படி தேவனுடைய வாக்கியங்கள் அவர்களிடத்தில் (இஸ்ரவேலர்) ஒப்படைக்கப்பட்டது என சொல்லி பழைய ஏற்பாடுதான் தேவனுடைய வாக்கியம் என குறிப்பிட்டுள்ளார். மேலும் 1 பேதுரு 4:11 படி ஒருவன் போதித்தால் தேவருடைய வார்த்தைகளின் படி போதிக்ககடவன் என தெளிவாக சொல்கிறது

.

பழைய ஏற்பாட்டில் உள்ள இறைவனின் நேரடி வார்த்தைகளும் புதிய ஏற்பாட்டில் உள்ள தேவ குமாரன் இயேசுவின் வார்த்தைகளும் உரசிப்பர்க்கும் உரைக்கல் போன்றது வேறு ஒரு உரைகல் கிடையாது.

.

நான் நிரூபங்களில் உள்ள வார்த்தையை தேவனின் வாக்கியங்களுடன் உறசிபார்த்தத்தில் தெரிந்த சில முக்கியமான வித்தியாசங்களை தொடர்ந்து பார்ப்போம்

.

நியாயபிரமாணம் முடிந்துவிட்டதா?

இயேசு கிறிஸ்துவின் சீடர்களும் அவரோடு கூட இருந்து உழியம் செய்த அப்போஸ்தலர்களான பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகிய மூவரும் எழுதிய நிருபங்களில் எங்கும் நியாயபிரமாணம் முடிந்தது பற்றி எதுவும் கூராதிருக்க பவுல் அவர்கள் மட்டும் தன் நிருபங்களில் 122முறை நியாயபிரமாணம் என்ற வார்த்தையை உபயோகித்ததோடு எல்லாவற்றிற்கும் மேலாக

 • "விசுவாசித்த யாவருக்கும் நீதி உண்டாகும்படி கிறிஸ்து நியாயபிரமாணத்தின் முடிவாயிருக்கிறார் (ரோமர் 10:4) என்றும்
 • "முந்தின கட்டளை பயனற்றதுமாய் இருந்தபடியால் மாற்றப்பட்டது (எபி: 7;18) என்றும் சொல்லியுள்ளார்.

.

உண்மையில் நியாயபிரமாணம் முடிந்துவிட்டதா? மாற்றப்படுவிட்டதா? இதை பற்றி பழைய ஏற்பாட்டில் கர்த்தரும், புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்துவும் என்னசொல்லியுள்ளனர்? என்பதை கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.
.
நியாயபிரமாணம் என்றால் என்ன?

நியாயம் என்றால் என்னஎன்பதை சொல்லும் கட்டளைகளும் பிரமாணங்களும் நியாயபிரமாணம் ஆகும். வேதத்தில் முதல் முதலில் நியாயபிரமாணம் என்ற வார்த்தை யாத்ராகமம் 16:4 ல் வருகிறது அதில் கர்த்தர் மோசேயை நோக்கி "...... அதினால் அவர்கள் என் நியாயபிரமாணத்தின்படி நடப்பார்களோ நடக்க மாட்டார்களோ என்று அவர்களை சோதிப்பேன்" என்று சொல்லுகிறார் அதன் மூலமும் அதன் பின் வரும் யோசுவா புத்தகத்தின் பல்வேறு வசனங்கள் மூலமும் (யோசு:8:30,32,34)"நியாயபிரமாணம் என்பது சீனாய் மலையில் கர்த்தர் மோசேயிடம் கொடுத்த கட்டளைகளும் பிரமாணங்களும்தான்" என்பதை தெளிவாக புரிந்துகொள்ள முடியும்.

.

சீனாய் மலையில் மோசேயிடம் கொடுக்கப்பட்ட இறைவனின் வார்த்தைகளை நான்கு பகுதிகளாக பிரிக்கலாம்

 1. கர்த்தரின் பத்து கட்டளைகள்
 2. கர்த்தரின் நீதி நியாயங்கள்
 3. கர்த்தரின் வாசஸ்தலம் அமைக்கும் முறை
 4. கர்த்தரின் கட்டளை அல்லது நியாயங்களை தெரிந்தோ தெரியாமலோ ஒருவர் மீறிவிட்டால் அந்த பாவத்தை நிவர்த்தி செய்யும் பலிகள்.

.

இந்த நான்கில் எவற்றை இயேசு கிறிஸ்த்து முடித்துவிட்டார்? என்பதை பார்ப்போம்

.

கர்த்தரின் பத்து கட்டளைகள், நீதி நியாயங்கள் முடிந்துவிடதா?
கொலை செய்யாதிருப்பயாக, களவு செய்யாதிருப்பாயாக, விபச்சாரம் செய்யாதிருப்பயாக என்ற கட்டளைகள் இயேசு மரித்தவுடன் முடிந்து "கொலை செய்யலாம்" என்றோ அல்லது "களவு செய்யலாம்" என்றோ மாறிவிடுமா? மாறாதல்லவா?

ஆகவே பத்து கட்டளைகள் துளிகூட மாறவில்லை.

(எபிரோன் சபையின் பாஸ்டர் எடிசன் அவர்கள் 60 நாட்கள் தொடர்ந்து அதிகாலை ஜெபிதபோது இறைவன் அதே பத்து கற்பனை அடங்கிய பலகையை அவரது கையில் கொடுத்ததுபோல் தரிசனம் கண்டார்களாம், அதே தரிசனம் AGசபை பாஸ்டர் மோகன் அவர்களுக்கும் இருந்ததாக பாஸ்டர் எடிசன் தனது மாத பத்திரிக்கையில் குறிப்பிட்டிருந்தார்)

.

அதுபோல அவர் சொன்ன நீதி நியாயங்களில் எது முடிந்து போய்விட்டது?

 • தகப்பனையும் தாயையும் சபிப்பவன் கண்டிப்பாக கொலை செய்யப்படவேண்டும் (யாத 21:17)
 • சூனியக்காரியை உயிரோடே வைக்கவேண்டாம் (யாத்:22:18)
 • மிருகத்தொடே புனருகிறவன் எவனும் கொலைசெய்யபடவேண்டும் (யாத்:22:19)
 • விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் ஒடுக்காது இருப்பீர்களாக(யாத்:22:22)

இது போல் எத்தனையோ நல்ல நல்ல நீதி நியாயங்களை சொல்லியுள்ளார்
யாத்ராகமம் முழுவதும் படித்து பாருங்கள் அவர் கொடுத்த நீதி நியாயங்கலெல்லாம் மிகவும் சரியானவை என்பதை நாம் புரிந்து கொள்ளலாம், அவைகள் ஒருபோதும் முடிந்துபோகாது. மேலும் இறைவன் சொன்ன நீதி நியாயங்களை யாராலும் மாற்றவோ முடிக்கவோ முடியாது. ஒரு தவறை செய்தவன் கொலை செய்யப்பட வேண்டும் என்று சொன்ன அதே இறைவனே "பழிவாங்குவதும் பதிலளிப்பதும் எனக்கே உரியது" என்றும் சொல்லியுள்ளதால அவர் வார்த்தைகளை கைகோள்ளுவதுதான் நமது கடமையே அன்றி கைகொள்ளாதவனை நியாயம் தீர்ப்பதை தேவனிடம் விட்டுவிட வேண்டும்

.

சங்கீதக்காரன் என்ன சொல்கிறான் பாருங்கள்

 • உம்முடைய நீதி நித்திய நீதி உம்முடைய வேதம் சத்தியம் (சங்: 119:142)
 • உம்முடைய வசனம் சமூலமும் சத்தியம் உம்முடைய நீதி நியாயங்கலெல்லாம் நித்தியம்(சங்: 119:160)
 • நீர் கட்டளையிட்ட சாட்சிகள், நீதியும் மகா உண்மையுமானவைகள் (சங்:119:138)

மேலும் கர்த்தர் தனது தீர்க்கதரிசிமூலம் என் நீதி அற்றுப்போவதில்லை (ஏசா:51:6) என்று கூறியுள்ளார்

.

இதோடு மட்டுமல்லாமல் அவர் நீதி நியாயங்கள் கொடுக்கப்பட்டது முதல் எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய தீர்க்கதரிசன புத்தகங்களின் கடைசி புத்தகமாகிய மல்கியா(4:4)வரை கர்த்தர் திரும்ப திரும்ப என் கட்டளைகளையும் நீதி நியாயங்களையும் கவனியுங்கள், கை கொள்ளுங்கள் என தலை தலையாய் அடித்துக்கொள்கிறார் (பார்க்க ஏசா:48:18, எசேக் 18:19)
ஆனால் நாம் ரொம்ப சிம்பிளாக நியாய பிரமாணம் முடிந்துவிட்டது என சொல்லி அவரை வாயடைத்து விடுகிறோம்.

என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை அந்நியகாரியமாக எண்ணினார்கள். (ஓசி 8:12)
இந்த வசனம் இந்த இடத்தை விட வேறு எங்கு இவ்வளவு சரியாக பொருந்தும்!

.

அது "பழைய ஏற்பாடு" என்று பலபேர் முணுமுணுப்பது எனக்கு புரிகிறது. அகவே புதிய ஏற்பாடு நியாய பிரமாணம் பற்றி என்ன கூறுகிறது என்பதையும் "என் பிதா சொன்னதையே செய்கிறேன்" என்று சொன்ன தேவ குமரன் இயேசு என்ன சொல்கிறார் என்பதையும் தொடர்ந்து பார்ப்போம்

.

இயேசுவின் வார்த்தைகளும் நியாயபிரமாணமும்:
இயேசு கிறிஸ்துவை பற்றி எழுதப்பட்ட எந்த சுவிசேஷத்திலும் நியாயபிரமாணம் முடிந்து விடும் என்றோ முடியபோகிறது என்றோ அதற்கு ஒப்பான வார்த்தைகளோ கூட சொல்லப்பட்வே இல்லை.
.
இயேசு முதல்முதலில் நியாயபிரமாணம் பற்றிய செய்தியை மத்தேயு 5:17,18ல் கூறியுள்ளார் அதில் மிக தெளிவாக:

.

"நியாயபிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதர்கு வந்தேன் என எண்ணிகொள்ளாதீர்கள், அழிக்கிறதர்கு அல்ல நிறைவேற்றுவதர்க்கே வந்தேன்" எனவும்

"வானமும் பூமியும் ஒழிந்து போனாலும் நியாய பிரமாணத்தில் உள்ளதெல்லாம் நிறைவேறுமளவும் அதில் ஒரு சிறு எழுத்தாகிலும் ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது என்று மெய்யாகவே உங்களுக்கு சொல்கிறேன்".

என்று சொன்னதோடு

.

நித்ய ஜீவனை அடைவதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற வாலிபனுக்கு இயேசு சொன்ன பதில் என்ன: "நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனையை கைகொள் என்பதே" (மத்: 19-16-19) அவன் கற்பனைகளை எல்லாம் சிறு வயது முதலே கை கொள்கிறேன் என்று சொன்னபிறகு தான் அடுத்த ஸ்டெப்பாகிய "உனக்கு உள்ளதை விற்று தரித்திரருக்கு கொடு" என்று சொல்கிறார்.

மேலும்

இயேசு வேதபாரகரையும் பரிசேயரையும் பார்த்து மயக்காரரே உங்களுக்கு ஐயோ என்று ஏன் சொன்னார்:" ...நீங்கள் ........(எல்லாவற்றிலும்) தசமபாகம் செலுத்தி, நியாயபிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும், இரக்கத்தையும், விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள், இவைகளையும் செய்ய வேண்டும் அவைகளையும் விடாதிருக்கவேண்டும்" (மத்:23:23) என்று சொல்லி நியாயபிரமாணத்தை விடக்கூடாது என குறிப்பிடுள்ளார்

.

இப்படி இயேசு கிறிஸ்து எல்லா இடங்களிலும் மிக மிக தெளிவாக கர்த்தரின் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்து சொன்னபிறகு வேறு யார் விளக்கம் உங்களுக்கு தேவை.

.

இயேசு பூமியில் வாழ்ந்த காலங்களில் பலமுறை தான் மரித்து மூன்றாம் நாளில் எழும்பபோவதாக கூறியுள்ளார் அப்படி கூறும்போது எங்காவது நான் எழுந்த பிறகு நீங்கள் நியாயபிரமாணத்தை கைக்கொள்ள வேண்டியதில்லை என கூறியுள்ளாரா? இல்லவே இல்லை.

.

மேலும் இயேசு இரண்டு பிரதான கற்பனைகளை கொடுத்து இதில் நியாய பிரமாணம் தீர்க்க தரிசனம் எல்லாம் அடங்கியுள்ளது என்று குறிப்பிட்டார் நல்லது! அதாவது இரண்டு மாங்காய்களை ஒரு கவரில் போட்டு இந்த கவரில் இரண்டு மாங்காயும் இருக்கிறது என்று சொன்னால் அதற்க்கு என்ன அருத்தம் எடுப்பார்கள் என்று புரியவில்லை. மாங்காயை தூர போட்டுவிட்டு கவரை கையில் எடுத்துக்கொண்ட கதையாக உள்ளது இன்றைய கதை!
.

இயேசு சொன்ன பிரதான கற்பனைகள்:

மத்தேயு 22;39,40ன் படி இயேசு பிரதான கற்பனை என்று இரண்டு கற்பனைகளை சொல்லி அதில் நியாய பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியுள்ளது என கூறியுள்ளார் அவைகள்:

 1. உன் தேவனாகிய கர்த்தர் மீது முழு இருதயத்தொடும் முழு ஆத்துமாவோடும் அன்பு செலுத்துவாயாக
 2. உன்னிடத்தில் நீ அன்பு கூறுவதுபோல பிறரிடத்திலும் அன்பு கூறுவாயாக .

இந்த இரண்டு வசனங்களும் பழைய ஏற்பாட்டில் உள்ளதுதான்:

 1. உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் முழு இருதயத்தொடும் உன் முழு அத்துமாவோடும், உன் முழு பலத்தொடும் அன்பு கூறுவாயாக (உபா: 6:5)
 2. உன்னில்நீ அன்புகூறுவதுபோல பிரனிலும் அன்பு கூறுவாயாக (லேவி 19:18)

முழு அன்பு செலுத்துதல் என்றால் என்ன?

அன்பு என்ற மூன்றெழுத்து வார்த்தைக்கு அனேக அர்த்தங்கள் இருந்தாலும் வேதாகமத்தின்படி இயேசு அன்பு செலுத்துதல் என்றால் என்ன என்று கீழ் கண்ட வசனங்களில் சொல்கிறார்:

 • ஒருவன் என்னில் அன்பாயிருந்தால் அவன் என் வசனத்தை கைகொள்வான் (யோவா:14:21)
 • என் கற்பனையை பெற்றுக்கொண்டு அவைகளை கைகொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாய் இருக்கிறான் (யோவா 14:23)
 • யோவான் அவர்களும் "நாம் தேவனுடைய கற்பனைகளை கைகொள்ளுவதே அவரிடத்தில் அன்பு கூறுவதாகும்" ( 1யோவா:5:3)

என தெளிவாக குறிப்பிட்டுள்ளார். இப்பொழுது நாம் இப்படி பார்ப்போம்:-

புதிய ஏற்பாடு காலத்தில் வாழும் நாம் இயேசுவின் கட்டளைகளை கை கொள்ள வேண்டுமா இல்லையா? (சிலர் வேண்டாம் பவுல் அவர்கள் நிருபத்தில் உள்ளதை கைகொண்டால் போதும் என நினைத்தால் பரவாயில்லை நீங்களும் பரலோகராஜ்யம் போக வழிஉண்டு. ஆனால் மாமிசத்தில் மரித்த பிறகுதான் அது முடியும்) ஆனால் ஒருவன் இயேசுவிடத்தில் அன்பாயிருக்கிறேன் என்றோ அவருக்காக வாழ்கிறேன் என்றோ சொன்னால் அவர் கட்டளையை கண்டிப்பாக கைகொள்ள வேண்டும்.

.

இப்பொழுது இயேசுவின் முதல் பிரதான கட்டளை என்ன?

உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் முழு இருதயத்தொடும் முழு அத்துமாவோடும் அன்பு செலுத்துவாயாக என்பதே

அன்பு செலுத்துவது என்றால் என்ன?

அவர் கற்பனைகளை கை கொள்ளுவது

.

அதனால் இயேசுவின் பிரதான கற்பனையே "கர்த்தரின் கற்பனைகளை கைகொள்" என்பதுதான் அது நியாயபிரமாணத்தில் உள்ளதுதான்

.

ஆக பிதாவும் குமாரனும் ஒருவருக்கொருவர் விட்டு கொடுக்காமல்

 • "இவர் என் நேச குமரன் இவர்க்கு செவி கொடுங்கள்" என்று பிதாவும்
 • "உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் முழு இருதயத்தோடு அன்பு செலுத்து" என்று குமாரனும் சொல்லியிருக்க.

.

கலாத்தியர் 5:14 பவுல் அவர்கள் உன்னிடத்தில் நீ அன்பு கூறுவது போல பிறரிடத்தில் அன்பு கூறுவாயாக என்ற ஒரே கற்பனையில் நியாய பிரமாணம் முழுவதும் நிறைவேறும் என சொல்லியிருப்பது எப்படி பொருந்தும் என தெரியவில்லை

அக மொத்தம்

தேவன் 10 கட்டளைகளை கொடுத்தார்

தேவகுமாரன் அதை இரண்டாக சுருக்கி கொடுத்தார்

பவுல் அவர்கள் அதை ஒன்றாக மாற்றினார்

மனிதர்கள் அதை ஒன்றுமில்லாமல் மாற்றிவிட்டனர்.

சரி

இப்பொழுது " உன்னிடத்தில் நீ அன்பு கூறுவது போல பிறரிடத்தில் அன்பு கூறுவாயாக என்ற ஒரே கற்பனையில் நியாயபிரமாணம் முழுவதும் அடங்குமா என பார்ப்போம்.

.

"உன்னிடத்தில் அன்பு கூறுவது போல பிறரிடத்தில் அன்பு கூறுவாயாக" "உன்னை நீ நேசிப்பது போல பிறரை நேசிப்பாயாக" என்பதற்கு உண்மை அருத்தம் என்ன?

.

அதன் அர்த்தம் மிக உயர்த்து அதை முழுமையாக விளக்க முடியாவிட்டாலும் அதை சுருக்கி சொன்னால்: "

.

ஒரு மிகப்பெரிய கஷ்டத்தில், அல்லது பிரச்சனையில், அல்லது துன்பத்தில், அல்லது பண நெருக்கடியில், அல்லது நோயில், அல்லது தேவையில் இருக்கும் ஒருவர் நம்மிடம் ஒரு உதவி கேட்டு வரும் போது அதே மோசமான நிலையில் நாம் இருந்தால் நாம் எப்படி நடந்துகொள்வோம் அல்லது எதிர் தரப்பினர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று விரும்புவோமோ அதை நாம் செய்வது ஆகும்.

.

தன்னை தானே நேசிக்ககாவன் இந்த உலகத்தில் வாழ முடியாது. எல்லோரும் தான் நன்றாக வாழ வேண்டும், தன் பிள்ளைகள் நன்றாக இருக்கவேண்டும். எந்த ஒரு துன்பமோ துயரமோ தனக்கோ தன் மனைவிக்கோ தனது பிள்ளைகளுக்கோ வந்துவிடக்கூடாது என்றுதான் நினைப்பார்கள் அதற்காகத்தான் அவர்கள் கஷ்டப்பட்டு ஓடி ஓடி உழைக்கிறான். அதில் தவறில்லை

ஆனால்

நாம் நம்மையும் நமது குடும்பத்தையும் நேசிப்பது போல அடுத்தவரையும் அவர்களது பிள்ளையையும் நேசிக்கிறோமா? நம்மை போலத்தானே அவர்களும் என்று அவர்களின் துன்பத்தை நமது துன்பம்போல எடுத்துக்கொண்டு ஓடி சென்று உதவி செய்கிறோமா. நண்பனை மட்டுமல்ல பகைவனையும் அதுபோல நேசிக்க வேண்டும். அவன் உங்களுக்கு எத்தனை முறை கெடுதல் செய்திருந்தாலும் சரி அவனையும் தன்னை போல நேசிக்க வேண்டும். தன்னை நெசிப்பவர்களையே நேசிப்பதால் பலன் இல்லை என இயேசு சொல்லியுள்ளார்.
.
ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன்:

நமக்கு பழக்கம் இல்லாத பக்கத்து வீட்டுக்காரரின் 5 மாத குழந்த்தை இரவு 11 மணிக்கு இடைவிடாமல் அழுகிறது என்று வைத்துக்கொள்வோம். அவர்கள் மிகவும் கஷ்டப்பட்ட குடும்பம், அந்த அழுகுரல் உங்களுக்கு கேட்கிறது என்றால், தன் குழந்தை அழுதால் நாம் எப்படி துடிப்போமோ அதுபோல் ஓடி சென்று நம்மால் செய்ய முடிந்த உதவியை (பண உதவி, கடைக்கு போவது, தன்னிடம் உள்ள ஒரு பொருளை கொடுத்து உதவுவது போன்றவை) செய்வது ஆகும்.

.

எந்த ஒரு சூழ்நிலையிலும் தன்னை அந்த இடத்தில் நிறுத்தி நாம் இப்படி இருந்தால் என்ன எதிர்பார்ப்போம் என்று யோசித்து நாம் எதிர்பார்ப்பதை பிறருக்கு செய்வது

.

இது மிகப்பெரிய கட்டளைதான். எல்லோரும் இதேபோல் செய்தால் இந்த உலகமே சொர்க்கமாக மாறிவிடும் என்பதில் ஐயமில்லை!

.

ஆனாலும் இதன் மூலம் இறைவனின் கட்டளைகளாகிய நியாயபிரமாணம் நிறைவேறும் என்று சொல்வது தவறு

எப்படியெனில்.

"ஒருவர் மிகப்பெரிய நோயால் பாதிக்கப்பட்டு இறக்கும் தறுவாயில் உள்ளார். அவருக்கு உடனடியாக கொஞ்சம் பணம் தேவை. நம்மிடம் கேட்கிறார். ஆனால் நம்மிடம் அவ்வளவு பணம் இல்லை. நாம் அவரை நம்மை போல நேசித்து இறக்கப்பட்டு அலுவலக பணத்தை தெரியாமல் எடுத்து உதவி செய்தால் களவு செய்யாதிருப்பாயாக என்ற நியாயபிரமாணத்தை மீறிவிடுவோம.

.

"ஓய்வு நாளில் ஒருவர் உங்களை ஒரு வேலைக்கு அழைக்கிறார். அந்த வேலை அந்நாளில் முடியாவிட்டால் அவருக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும். இந்த சூழ்நிலையில் உன்னை போல அவரை நேசித்து வேலைக்கு போவோமேன்றால் "ஓய்வு நாளில் வேலை செய்யக்கூடாது என்ற நியாயபிராமாண கட்டளையை மீறிவிடுவோம.

.

பிறன் மனைவியின் மீது ஒருவன் தகாத ஆசை வைத்து தற்கொலை செய்ய துணிந்தால் அவனை தன்னை போல நேசித்து அவன் ஆசையை பூர்த்தி செய்ய முற்படும்போது விபச்சாரம் செய்யாதே என்ற வார்த்தை மீறப்படும்.

.

அகவே தன்னை நேசிப்பது போல பிறரை நேசி என்ற கற்பனை உயர்ந்ததுதான். ஆனால் அதில் நியாயபிரமாணம் முழுவதும் அடங்க எந்த வாய்ப்பும் இல்லை அகவே தான் இயேசு கர்த்தரிடத்தில் அன்பு செலுத்தி(கற்பனைகளை கைக்கொண்டு) உன்னை நீ நேசிப்பது போல பிறரை நேசி என்றார்.

.

இனி இன்றைய கிறிஸ்தவர்கள் (வைராக்கியத்தோடு?) பின்பற்றும் நிருபங்கள் நியாயபிரமாணம் பற்றி என்ன சொல்கின்றன என்பதை பார்ப்போம்

.

நிரூபங்களின் பார்வையில் நியாயபிரமாணம்:-

பாவம் செய்ய கூடாது என்பது எல்லோருக்கும் பொதுவான ஒரு கட்டளை. தேவனால் பிறந்தவன் எவனும் பாவம் செய்யான் என்றும் பாவம் செய்பவன் எவனும் பாவத்துக்கு அடிமையாய் இருக்கிறான் என்றும் வேதம் தெளிவாக சொல்கிறது.

 • பவுல் அவர்களும் நாம் நியாயபிரமாணத்துக்கு கீழ் பட்டிராமல் கிருபைக்கு கீழ்பட்டிருக்கிறபடியால் பாவம் செய்யலாமா? கூடாதே? என்று ரோமர் 6:15லும்
 • கோபம் கொண்டாலும் பாவம் செய்யாதிருங்கள் என்று எபேசி 4:16லும் கூறியுள்ளார்

சரி பாவம் செய்ய கூடாது என்பது எல்லோருக்கும் தெரியும்

எது பாவம்?

பாவம் செய்யக்கூடாது என்று போதிக்கும் சபைகள் பாவம் என்றால் என்ன? எதுவெல்லாம் பாவம் என்று தெளிவாக போதிப்பது இல்லை. இன்றைய கிறிஸ்தவர்களிடம் எது பெரிய பாவம் என்று கேட்டால்,

.

பீடி சிகரட் பான்பராக் உபயோகிப்பது, மது அருந்துவது, சபைக்கு போகாதது, ஜெபம் பண்ணாதது, கெட்ட வார்த்தைகள் பேசுவது, திருவிருந்தில் கலந்து கொள்ளாதது போன்ற அனேக காரியங்களை சொல்வார்கள்.

.

ஆனால் வேதத்தில் பல முறை சொல்லியிருக்கும் பொய் சொல்லக்கூடாது, ஒரு சிறு பொருளை கூட திருடக்கூடாது, வட்டி வாங்கக்கூடாது, நியாயமாய் நடக்க வேண்டும், பத்து கட்டளைகளை கண்டிப்பாக கை கொள்ள வேண்டும், ஒய்வு நாளில் பணம் சம்பாதிக்கும் வேலை செய்யக்கூடாது போன்ற இறைவனின் உண்மை வார்த்தைகளை பாவம் என்று போதிப்பது இல்லை.

உண்மையில் பாவம் என்பது எது என்று ஆராய்வோமானால். முதன் முதலில் பாவம் எப்படி பூமிக்குள் வந்தது?

ஆதம் ஏவாள் இருவரும் தேவன் கட்டளையை மீறி புசிக்க கூடாது என்று சொன்ன கனியை புசித்தனர் அது பாவமாயிற்று.

அகவே சுருக்கமாக சொன்னார்

தேவன் சொன்ன வார்த்தையை மீறினால் அது பாவம்.

தேவனுடைய வார்த்தை ஜீவனுள்ளது அந்த வார்த்தைகளின் படித்தான் இந்த உலகமே அந்தரத்தில் நிலைநிற்கிறது, தன்னை தானே சுற்றுகிறது. பகல் இரவு கொடை குளிர் எல்லாமே ஏற்படுகிறது. அதன் படி நடப்போருக்கு ஆட்டமேடிக்காக சகல நன்மைகளும் வந்து சேரும் அதை யாரும் தடுக்க முடியாது

அவர் சொன்ன வார்த்தையை மாற்ற அவர் ஒருவருக்கே அதிகாரம் உள்ளது. தேவ குமாரனாகிய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கூட கர்த்தர் சொன்ன வார்த்தைகளை இன்னும் கடினமாக்கினாரே தவிர எதையும் கைக்கொள்ள வேண்டாம் என்று சொல்லவே இல்லை.


அகவே தேவனால் சொல்லப்பட்டு பின்பு அவரால் மாற்றப்படாத வார்த்தைகள் எல்லாம் கண்டிப்பாக கைகொள்ளப்பட வேண்டும். அதை மீறினால் அதுதான் தேவனின் பார்வையில் உண்மையான பாவம். மேலும் தேவன் செய்யமுடியாத கட்டளைகள் ஒன்றையும் நமக்கு கொடுக்கவில்லை. மிகவும் கஷ்டமான பலியிடுதல், இரத்தம் சிந்துதல் போன்றவற்றை கர்த்தர் பின்னாளில் பலியை அல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்று சொல்லி மாற்றி விட்டார்.
.

நியாயபிரமாணத்தின் மூலம் ஒருவரும் நீதிமானாக்கப்படுவது இல்லை ஆனால் இயேசுவின் இரத்தம் மூலம் நீதிமானாக்கப்பட்ட நாம் அந்த நீதியில் தொடர்ந்து நிலைத்து நிற்க வேண்டுமென்றால் தேவனின் வார்த்தையை மீறி பாவம் செய்யாதிருப்பது மிகமிக அவசியம். ஏனென்றால் மீண்டும் நாம் தேவனுடைய வார்த்தையை மீறி மரணத்துக்கேதுவான பாவம் செய்வோமானால் நம்மை மீட்க வேறொரு பலி இல்லை.

நிரூபங்கள் என்ன சொல்கின்றன?

 • நியாயபிரமாணத்தை மீறுவதே பாவம்(1 யோவா:3:4)
 • பாவத்தை அறிகிற அறிவு நியாயபிராமணத்தினாலே வருகிறபடியால்(ரோம 3:20)
 • பாவம் இன்னதென்று நியாயபிராமணத்தினாலே அறிந்தேனேயன்றி மற்றபடியல்ல. (ரோம 7:7)
 • நியாயபிரமாணம் இல்லாது மீறுதல் இல்லை (ரோமர் 4:15)

.

நியாய பிரமாணம் முடிந்துவிட்டது என்று எழுதியிருக்கும் பவுல் அவர்கள் "தகப்பனையும் தாயையும் கணம் பண்ணுங்கள்" என்றும் "விபசாரக்காரன்.. விக்கிரக ஆராதனைகாரன் தேவனுடய ராஜ்யத்தை சுதந்தரிப்பதில்லை" என்றும் எதன் அடிப்படையில் கூறுகிறார்.
.

"தகப்பனையும் தாயையும் கனம் பண்ணுவாயாக" மற்றும் "விபச்சாரம் செய்யாதிருப்பாயாக"
என்பது பத்து கற்ப்பனையில் உள்ளவைகள் அல்லவா?
.

அவ்வாறு இருக்கையில், முடிந்துபோனத்தை ஏன் பவுல் திரும்ப இழுக்கவேண்டும்?

.

ஏனெனில், எது பாவம், எது பாவமல்ல என்பதை நியாய பிரமாணம்தான் சொல்கிறது என்பதை எல்லோரும் ஒப்புகொள்கின்றனர். இப்பொழுது மேலே சொன்னவற்றை ஒரு தொகுப்பாக பார்த்தால்

 • மனிதன் பாவம் செய்யலாமா? - கூடாது.
 • பாவம் எவைகள் என எப்படி அறிந்துகொள்ளலாம்? -நியாயபிரமானணத்தின் மூலம்
 • பாவம் எது? - நியாயபிரமாணத்தை மீறுவது.

நியாய பிரமாணத்தை மீறக்கூடாது என்றால் அவைகள் கைகொள்ளப்பட வேண்டுமல்லவா?

.

பிறகு எப்படி நியாயபிரமாணம் முடிந்து போகும்?.

.

சாக்கு போக்கு சொல்லும் மனிதகூட்டம்:

அக மொத்தம் தேவன் விலக்கிய கனியை புசித்துவிட்ட ஆதாம் தேவனிடமே துணிந்து "நீர் எனக்கு துணையாக கொடுத்த ஏவாள் தந்ததால் புசித்தேன்" என்று ஏவாள் மேலும் அவளை உண்டாக்கிய தேவன் மேலும் பழியை போட்டதுபோல இன்றைய மனித கூட்டமும் எதற்கு எடுத்தாலும் ஒரு சாக்கு போக்கு சொல்லுவது அல்லது யார் மேலாவது பழியை போடுவது என தொடர்ந்து வெற்றிகரமாக ஆதாமின் பாவத்தை நிறைவேற்றி வருகிறது என்பதை சுலபமாக புரிந்துகொள்ளலாம்.

.

நீங்கள் யாருக்கு முழுமையாக கீழ்படிகிறீர்கள் ?

பழைய ஏற்பாட்டில் தேவனாகிய கர்த்தர் கட்டளையிட்ட:-

 • ஒய்வு நாளில் ஒரு வேலையும் செய்யக்கூடாது (உப:5:13)
 • நீரில் வழ்பவைகளில் சிறகும் செதிலும் இல்லாதவைகளை புசிக்ககூடது (லேவி)
 • ஸ்திரி விலக்காய் இருக்கும் போது ஏழு நாள் அவளுடன் சேரக்கூடாது.
 • பணத்தை வட்டிக்கு கொடுக்கக்கூடாது (வங்கியில், PF கூட) (எசெக்18:8)

போன்ற அனேக தேவனின் கட்டளைகள் கைகொள்ளப்படுவது இல்லை. காரணம் கேட்டால் பழைய ஏற்பாடு முடிந்து விட்டது என்கிறார்கள்

புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து சொன்ன:-

 • உன்னிடத்தில் கேட்பவனுக்கு கொடு( லூக் : 6:30)
 • உன்னிடத்தில் கடன் வாங்க விரும்புபவனுக்கு மனம் கோணாதே (மத்:5:42)
 • பூமியிலே உங்களுக்கு பொக்கிசங்களை சேர்த்துவைக்க வேண்டாம் (மத்:6:21)
 • உங்களுக்கு உண்டானவைகளை விற்று பிச்சை கொடுங்கள் (லூக்:12:33)
 • திருப்பி கொடுப்பார்கள் என்ற எண்ணத்தில் கடன் கொடாதே.
 • உன் வீட்டில் விருந்து பண்ணும் போது ஏழை பிச்சைகாரனை கூப்பிடு
 • ஒரு கன்னத்தில் அடித்தல் மறு கன்னத்தை திருப்பி கொடு(லூக்:6:29)

போன்ற தேவ குமாரனின் கட்டளைகள் கை கைகொள்ளப்படுவது இல்லை. காரணம் கேட்டால் இந்த உலகத்தில் வாழும் நாம் அப்படியெல்லாம் செய்ய முடியாது அது மிக கடினம் என்றோ அல்லது எதோ ஒரு சாக்கு சொல்கின்றனர்

அட்லீஸ்ட் பவுல் அப்போஸ்தலர் எழுதிய:

சபைகளில் உங்கள் ஸ்திரிகள் பேசக்கூடாது, பேசும் படி அவர்களுக்கு உத்தரவில்லை(1கொரி:14:34)

 • அர்த்தம் சொல்லுகிறவர் இல்லை என்றல் சபையில் அன்னிய பாஷை பேசக்கூடாது(1கொரி:14:27,28)
 • உண்ணவும் உடுக்கவும் உண்டயிருந்தால் போதும் என்று இருக்கக்கடவோம் (1 தீமோத்:6:8)
 • தெய்வ பயத்தொடே ஒருவருக்கொருவர் கீழ்படியுங்கள் (எபே 5:21)
 • பொய்யை களைந்து அவனவன் பிறருடன் மெய்யை பேசுங்கள்(எபே:4:25)
 • ஒருவருக்கொருவன் அன்பு கூறுகிற விஷயத்திலன்றி ஒன்றிலும் கடன்படாதிருங்கள்

.

போன்ற ஆவியானவரின் வார்த்தைகளும் கைக்கொள்ளபடுவதில்லை ஏன் என்று கேட்டால் நாங்கள் ஆவியில் நடத்தப்படுகிறோம் பாவம் எங்களை மேற்கொள்ள மாட்டாது அல்லது நாங்கள் வாக்குவாதம் பண்ண மாட்டோம் என்று சொல்லி எஸ்கேப் ஆகி விடுகிறார்கள்.

.
ஆவியால் நடத்தப்பட்டால் பாவம் மேற்கொள்ள முடியாதா?

ஆவியால் நடத்தப்படுகிறோம் என்ற மாயபோர்வை ஒன்றை போர்த்திக்கொண்டு எதற்கும் முழு பிரதிஷ்ட்டையோடு கீழ்படியாமல் உலகத்தோடு ஒத்த வேஷம் போட்டு வாழும் சகோதரனே சகோதரியே ஆவியானவர் சபைக்கு எழுதிய செய்திகளை வெளி: 2 ம் அதிகாரம் முதல் பார்க்கிறோம் அதில் சொல்லப்படும் 7 சபையில் 2 சபைதான் ஆவியானவரால் கடிந்துகொள்ளப்படவில்லை மற்ற 5 சபையும் ஆவிக்குரிய சபைதான் அந்த சபையை இறைவன் விரும்பாத பாவம் எப்படி மேற்கொள்ள முடிந்தது என்று சற்று யோசிக்கவும். இதன் மூலம் ஆவியால் நடத்தபபடுகிறவரும் வஞ்சிக்கப்பட முடியும் என்ற உண்மையை தெரிந்துகொள்ளலாம்

.

மேலும் நாம் நியாயபிராமணத்துக்கு கீழ்பட்டிராமல் கிருபைக்கு கீழ்பட்டிருக்கிறபடியால் பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது என ரோமருக்கு எழுதும் போது :6:14ல் பவுல் அவர்கள் எழுதுகிறார்கள். அதனால் அநேகர் பாவத்தை மிகவும் சுலபமாக செய்ய துணிகின்றனர். ஆதி திருச்சபையில் இருந்த அனனியா சபீராள் இருவரும் கிருபையின் காலத்தில் வாழ்ந்த ஆவியை பெற்ற கிறிஸ்தவர்கள்தான் எப்படி அவர்களை இதயத்தை சாத்தான் நிரப்பி ஆவியானவரிடமே பொய்சொல்ல வைத்தான் அவர்களை பாவம் எப்படி மேற்கொண்டு மரணம் வரை கொண்டு சென்றது?

.

பாவம் எந்த நேரமும் யாரையும் வஞ்சிக்க வல்லது மோசம் போகாதிருங்கள்
.

மேற்சொன்ன காரணங்களை தொகுப்பாக பார்த்தால் எதற்கும் முழுமையாக கீழ்படிய விரும்பாத மனித கூட்டத்தின் கீழ்படியாமையினால்தான் இன்று வரை மரணம் இல்லாமல் வாழ முடியவில்லை என்பதை மிக சுலபமாக புரிந்துகொள்ளலாம் .

.

சாத்தானின் திசை திருப்பும் தந்திரம்:

மனிதன் இப்படி கீழ்படிய விரும்பாமல் இருக்கும்போது சாத்தான் என்ன செய்கிறான் பாருங்கள்.

பிசாசையே தெய்வமாக வழிபடும் ஒரு கூட்டத்தை வைத்துள்ளான்

அதை மீறி வந்தால்

இறைவன் இல்லை என சொல்லும் அளவு ஒரு கூட்டத்தை பிடித்து வைத்துள்ளான்.

அதையும் மீறி இறைவன் என்று ஒருவர் உண்டு என வந்தால்

கல்லையும் மண்ணையும் சிலையையும் வழிபடும்படி ஒரு கூட்டத்தை திசை திருப்பி வைத்துள்ளான்.

அதையும் மீறி வருபவர்களை வஞ்சிக்க

பைபிளை போலவே ஒரு வேதம் ஒன்றை உருவாக்கி அதை வைராக்கியத்தோடு பின்பற்றும்படி வைத்து இயேசுவால் கிடைக்கும் பாவ மன்னிப்பை மட்டும் நம்பாமல் இருக்கும்படி ஒரு பெரிய கூட்டத்தை திசை திருப்பியுள்ளான்.

அதையும் மீறி இயேசுவை அறிந்து கொண்டால்

மரியாள் தெய்வமாக்கி அவர்கள் மூலமாகத்தான் இயேசுவை வணங்க வேண்டும் என்று ஒரு கூட்டத்தை திசை திருப்பி வைத்துள்ளான்.

அதையும் மீறி இயேசுவிடம் வந்தால்

மீட்பின் முத்திரையாகிய பரிசுத்த ஆவியை நம்பாமல், அதனால் அணலும் குளிரும் இல்லாமல் இருக்கும்படி ஒரு கூட்டத்தை திசை திருப்பி உள்ளான்.

அதையும் மீறி உண்மையான வழிக்கு வந்துவிட்டால்

இறைவனின் உண்மை வார்த்தையை கைகொள்ளாமல் மிக சுலபமாக எப்படி பரலோகம் போய் சேரலாம் என தவிக்கும் மனிதர்களுக்கு ஆவியனவரின் வார்த்தைகளை அவர்களுக்கு ஏற்றார்போல் புரட்டி காண்பிக்கிறான் அவர்களும் சுலபமாக அவன் வலையில் விழுந்து விடுகின்றனர். பரலோகம் போய் சேர்ந்தால் போதும் என என்னும் அளவுக்கு சோதனையையும் துன்பங்களையும் கொடுத்து எப்படியாவது தன் வலையில் இழுக்க பார்க்கிறான். முடியவில்லை, அதையும் மீறி அவர்கள் சரியான பாதையில் நடந்து பரலோகம் போய் சேர்ந்துவிட்டால் தலையில் உள்ள ஒரு முடி போனது போல "போ" என விட்டு விட்டு மீண்டும் உலகில் உள்ள அடுத்த விசுவாசியை நோக்கி கண்களை திருப்புகிறான்.

.
ஒருவர் பரலோகம் போனதினால் சாத்தானுக்கும் அவனுடைய ராஜ்ஜியத்துக்கும் எந்த ஒரு பாதிப்பும் இல்லை. அவன் ராஜ்ஜியம் பூமியில் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். நமக்கு இறைவனை பற்றி தெரியுமோ இல்லையோ அவனுக்கு இறைவனை பற்றி நன்றாக தெரியும். இறைவன் மிகுந்த இரக்கம் உள்ளவர் என்றும் அவர் ஒரு ஆத்துமா அவனது பிடியில் உள்ளவரை அவனை அக்கினி கடலுக்கு அனுப்பமா ட்டார் என்றும் அவன் அறிந்து வைத்திருக்கிறான் .மேலும் அவனுக்கும் இது வாழ்வா சாவா என்ற போராட்டம் அகவே அவன் தன் முழு பெலத்தையும் தந்திரத்தையும் உபயோகித்து எல்லோரையும் வஞ்சித்து வருகிறான்.

.

இனியும் நான் காலதாமதம் பண்ணாமல் முதலில் மரணமில்லா வாழ்க்கைக்கு வழியை எழுதிவிட்டு பிறகு அதற்கான மற்ற வசன ஆதாரங்களை எழுதுகிறேன்.

.

தொடர்ந்து படிக்க ...... www.jeevavazhi.blogspot.com
9 comments:

உண்மை அடியான் said...

உங்களை ஆண்டவர் அதிசயமாக சந்தித்து உள்ளார்

add said...

"மேலும் நிரூபங்கள் எழுதிய ஒவ்வொருவரும் இதை ஆவியானவர் எழுத சொல்கிறார் என்று சொல்லி சொல்லி எழுதவில்லை. மாறாக அனேக நிரூபங்களை எழுதிய பவுல் அவர்களே "என்னுள்ளும் தேவனுடைய ஆவி உண்டென்று எண்ணுகிறேன்" (Iகொரி:7:40) என சந்தேகமாகத்தான் கூறியுள்ளார்." இது பவுல் திருமணம் பற்றி சொன்ன போது கூறியுள்ளார். இது அந்த advice about marriageக்கு மட்டுமே உரியது.பவுல் தன் அபிப்பிராயத்தை எங்கு சொல்கிறாறோ அந்த இடத்தில் மட்டும் தான் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும், சகோதரரே, என்னால் பிரசங்கிக்கப்பட்ட சுவிசேஷம் மனுஷருடைய யோசனையின்படியானதல்லவென்று உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.12. நான் அதை ஒரு மனுஷனால் பெற்றதுமில்லை, மனுஷனால் கற்றதுமில்லை, இயேசுகிறிஸ்துவே எனக்கு வெளிப்படுத்தினார் (கலாத்தியர்: 1:11,12) (இந்த மாதிரி பின்னாளில் சொல்லுவார்கள் என்று அறிந்து தான் பவுல் இவ்வாறு சொல்லியுள்ளாரோ)இங்கு தெளிவாக உள்ளது பவுலின் சுவிசேஷம் இயேசுகிறிஸ்துவினால் வெளிப்படுத்தப்பட்டது என்று. பவுலின் சுவிசேஷம் நியாயபிராமாணத்தை பின் பற்றுவதல்ல.

add said...

நியாயப்பிரமாணம் யூதர்களுக்கு கொடுக்கப் பட்டது. பத்து கட்டளைகள் மட்டும் அல்ல அதற்கும் மீறி நிறைய இருகிறது. அதன்படி இருக்க வேண்டுமானால் லேவி கோத்திரத்தான் தான் ஆசாரியன். மற்றும் விருத்தசேதனம், பலியிடும் முறை எல்லாம் பின்பற்ற வேண்டும். ஏனென்றால் நியாயப்பிரமாணம் ஒன்றையாவது மீறினால் அவன் சபிக்கப்பட்டவன். பின் பற்றினால் எல்லாவற்றையும் பின் பற்ற வேண்டும். அப்படியானால் கிறிஸ்து மரிக்க வேண்டிய அவசியமில்லை.புதிதாக (தவறான)ஒரு ரோடு போட வேண்டாம்

SUNDARARAJ said...
This comment has been removed by the author.
SUNDARARAJ said...

சகோதரர் அவர்களே!

நானும் பவுல் அவர்கள் சொன்னதையே சொல்கிறேன், நான் எழுதியுள்ள எதுவும் மனுஷ யோசனை அல்ல எந்த மனுஷன் சொல்லியும் நான் கேட்டு இதை எழுதவில்லை. எல்லாவற்றிற்கும் வேத ஆதாரம் உண்டு மேலும் அது தேவனால் எனக்கு ஆதாரத்தோடு தெரிவிக்கப்பட்டது.

மேலும் பவுல் அவர்கள் பல இடங்களில் நான் சொந்தமாக சொல்வது (1கொரி 7:8, 7:12, ரோ
12:3) என்று குறிப்பிட்டுள்ளார். அவர் பிரசங்கித்த சுவிசேஷம் மனுஷனுடயது அல்ல என்பதை நான் மறுக்கவில்லை நான் என்ன சுவிஷேசத்தையா மறுக்கிறேன்
பவுல் அவர்கள் சுவிஷேசத்துடன் அவர் சொந்த கருத்துக்களை கூட்டியுள்ளார் என்பதுதான் எனது கருத்து.

உதாரணமாக நான் இயேசுவை பின் பற்றுவது போல நீங்கள் என்னை பின் பற்றுகள் (1கொரி 4:16,17) என்று கூட சொல்லியுள்ளார் அது சரியா? நாசியில் சுவாசம் உள்ள மனிதனை நம்புவதை விட்டு விடுங்கள் என்று வேதம் சொல்லும் பொது இந்த வார்த்தைகள் மிகையாக தெரியவில்லையா?

தேவனே மனிதனுக்கு ஏற்ற துணையை உண்டாக்கி தந்திருக்கும் போது இவர் "ஸ்திரியை தொடாமல் இருப்பது மனிதனுக்கு நல்லது" என்று ஒரு உபதேசம் சொல்கிறார். பல அவருடைய சொந்த கருத்துக்கள் உள்ளன என்பது தான் எனது கருத்து. அவை நல்ல கருத்துக்களாக இருக்கலாம் ஆனால் தேவனின் வார்த்தைகள் அல்ல.

பவுல் அவர்களுக்கு இதுபோல் நியாய பிரமாணத்தை கைகொள்ள வேண்டாம் என்று சொன்ன இயேசு "நியாய பிரமாணம் முடிவதில்லை என்றும்" "ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனையை கைகோள்" என்றும் சொல்லி இரட்டை வேடம் போடுபவர் அல்ல.

மனிதன் தவருவானா அல்லது இயேசு தவருவாரா? நீங்களா யோசியுங்கள்.

மேலும் நியாய பிரமாணத்தில் எவை எவைகளை மரணத்தின் மூலம் இயேசு முடித்திருக்கிறார் என்று "ஜீவ வழியில்" தொடர்ந்து எழுதியுள்ளேன் படித்து பின் இயேசு மரித்தது எதற்க்காக என்றும, நியாய பிரமாணத்தில் எவைகள் முடிந்து போயின என்றும அறிந்து பின் எழுதுங்கள்

நான் போடுவது புதிய ரோடு அல்ல யாரும் அறியாமல் இருக்கும் பழைய ரோட்டை தான் காண்பிக்கிறேன். எல்லோருக்கும் தேவனின் வார்த்தையும் இயேசுவின் வார்த்தையையும் விட பவுல் அவர்களின் வார்த்தை பெரிதாக தெரிவது தான் ஆச்சர்யமாக இருக்கிறது!

பவுல் அவர்கள் தவறாக சொல்லவில்லை மனிதர்கள் தங்களுக்கு ஏற்றாற்போல் தவறாக புரிந்துகொண்டனர் அவ்வளவுதான்

Richard said...

சகோ. சுந்தர் அவர்களுக்கு,

நீங்கள் கொடுத்திருக்கும் தலைப்பு ஆராயப்படவேண்டியதுதான். சகோதரர்கள் சொல்வதுபோல இதை வேத அடிப்படையில்தான் ஆராய வேண்டுமே தவிர தனிமனித வெளிப்பாடுகளை அல்ல. ஏனென்றால் புதிய ஏற்பாடு எழுதி முடிக்கப்படும் வரைதான் இத்தகைய 'வெளிப்பாடுகள்' தேவன் கொடுத்தார். தேவன் கொடுத்த கடைசி வெளிப்பாடு 'வெளிப்படுத்தின' விசேஷம். அதன்பின் அவர் யாருக்கும் எதுவும் 'வெளிப்படுத்த' வேண்டிய அவசியத்தில் இல்லை. எல்லாவற்றையும் அவர் அதில் வெளிப்படுத்திவிட்டபடியால் நாம் அதை மாத்திரமே சார்ந்து இருக்க முடியும்.

முதலில் நாம் தமிழில் உபயோகிக்கும் 'பாதாளம்' 'நரகம்'
போன்ற வார்த்தைகளை முதலில் சாதாரணமாக ஆராயலாமே!
'பாதாள சாக்கடை'யில் நான் ஒரு வேதனையயும் பார்த்ததில்லை. ஒரு வேளை நாற்றமடித்து கெட்ட வாயுக்கள் உருவாகி சில மரணங்கள் சம்பவிக்கிறது.

எனவே நீங்கள் தரையில் ஒரு அடி குழிபறித்தாலும் அது 'பாதாளம்'தான். ஆக முதலில் நீங்கள் பாதாளத்தைப் பார்த்தீர்களா இல்லை 'நரகத்தை'ப்பார்த்தீர்களா என முடிவு செய்யவும்.

சங்71:20 Though you have made me see troubles, many and bitter,
you will restore my life again;
from the depths of the earth
you will again bring me up.

இங்கு பூமியின் ஆழங்களில் என்று அர்த்தம்.

1சாமு2:6 "The LORD brings death and makes alive;
he brings down to the grave and raises up.

இங்கு அதே பாதாளம் ஆங்கிலத்தில் 'கல்லறை' ஆகிவிட்டது.

வெளி 9:2 When he opened the Abyss, smoke rose from it like the smoke from a gigantic furnace.
இங்கு தமிழ் 'பாதாளம்' ஆங்கில Abyss 'படுகுழி' ஆகிவிட்ட்து.
சங்88:6 You have put me in the lowest pit,
in the darkest depths.
இங்கு தமிழ் 'பாதாளம்' 'கீழான குழி'(lowest piட்) ஆகிவிட்டது.

எசே 31:16 I made the nations tremble at the sound of its fall when I brought it down to the realm of the dead to be with those who go down to the பிட்.

இங்கேயும் மரித்தோரின் நிலை மற்றும் குழிதான்.
ஏசா14:9 The realm of the dead below is all astir
to meet you at your coming;

இங்கேயும் மரித்தோரின் நிலை குழிதான்.

ஏசா5:14 Therefore the grave enlarges its appetite
and opens wide its mouth;

இங்கு அதே பாதாளம் மீண்டும் ஆங்கிலத்தில் 'கல்லறை' ஆகிவிட்டது.

நீதி30:16 the grave, the barren womb,
land, which is never satisfied with water,
and fire, which never says, 'Enough!'

ஆங்கிலத்தில் 'கல்லறை'

20 Death and Destruction [b] are never satisfied,
and neither are human eyes.
இங்கு 'மரணம் மற்றும் அழிவு'

நீதி1:12 let's swallow them alive, like the grave,
and whole, like those who go down to the pit;
'கல்லறை'

சங்49:14 They are like sheep and are destined to die;
death will be their shepherd
(but the upright will prevail over them in the morning).
Their forms will decay in the grave,
far from their princely mansions.

'கல்லறையில்' உருவம் அழியும்.

நீதி7:27 Her house is a highway to the grave,
leading down to the chambers of death.

'கல்லறை' கல்லறைதானே மரண அறை.
So, your experience does not match with scriprutes. Be careful. God will never reveal anything to anyone apart from the scriptures. God Bless you.

SUNDARARAJ said...

சகோதர் அவர்களே!

உங்கள் பதிலை பார்க்கும் பொது நரகம் என்ற ஒன்றே இல்லை என்று சொல்ல வருவதுபோல் தெரிகிறது. அப்படி ஒரு நினைப்பு இருக்குமானால் தயவுசெய்து மாற்றிக்கொள்ளவும்.

மேலும் எதற்கு எடுத்தாலும் மூல பாஷையை ரெபர் பண்ணிதான் நாம் உண்மை கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைப்பது தவறு. வேதத்தை எழுதியவர் தேவ ஆவியானவர் நாம் அவரைத்தான் ரெபர் பண்ண வேண்டும்.

என்னை பொறுத்தவரை என் கையில் உள்ள தமிழ் வேதமே சரியானது அதை இறைவன் நிச்சயம் சரிபார்த்துதான் தந்திருப்பார். பைபிளை தேவ வார்த்தை என்று நம்பினால் நாம் இதையும் நம்பவேண்டும் ஏனெனில் மொழிகளை உண்டாக்கிய அவருக்கு எல்லா மொழியும் தெரியும் அதை எப்படி மொழி பெயர்த்து வழங்க வேண்டும் என்பதும் தெரிந்துதான் அவர் நிச்சயம் சரியாக செய்திருப்பார். எனவே ஒரு விஷயத்தில் தெழிவு வேண்டும் என்றால் மூல பாஷயை தேடுவதைவிட ஆண்டவரிடம் பிடிவாதமாக ஜெபித்து அதன் உண்மையை அவரிடம் கேட்டு அறிவதுதான் மேல்.

சரி உங்கள் கருத்துப்படி பாதளம் என்பது கல்லறை குழியாகவே இருந்துவிட்டு போகட்டும் அங்கு வேதம் சொல்வது போல் நித்திய வேதனை உண்டா? நித்ய வேதனை உள்ள இடம் ஒன்று இருக்கிறது என்று கீழ்க்கண்ட வசனங்கள் மூலம் அறியமுடிகிறது:

அவர்களும் வேதனையுள்ள இந்த இடத்துக்கு வராதபடி, அவன் போய் அவர்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும் பொருட்டு, (லூக்
நீ இரண்டு காலுடையவனாய் அவியாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப்படுவதைப்பர்க்கிலும்
(மாற்:
சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்(மத
பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்(வெளி

"நித்திய ஜீவன்" வாக்கு பண்ணப்பட்டதுபோல, "நித்திய நிந்தை" நிச்சயம் உள்ளது என்பதை கீழ்க்கண்ட வசனங்கள் சொல்கின்றன

பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள். (தானி
இவர்கள் நித்திய ஆக்கினை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார். (மத

இப்படியெல்லாம் வசனங்கள் சொல்லும்போது நீங்கள் வெறும் குழி, கல்லறை என்று அதைப்பற்றி சொல்வது சரியானதா? ஒரு கல்லறையில் நித்திய வேதனை நிந்தை உண்டா? அவியாத அக்கினி உண்டா?

சகோதரர் சொன்னது
இரண்டாவது, புதிய ஏற்பாடு எழுதி முடிக்கப்பட்டவுடன் யாருக்கும் எந்த 'வெளிப்பாடும்' கொடுக்கவில்லை

இப்படி வெளிப்பாடு கொடுக்கவில்லை என்பதை நீங்கள் உறுதியாக சொல்லமுடியாது. அதன்பின் வேதத்தில் எழுதப்படவில்லை என்றுதான் சொல்லமுடியும்

தேவன் அப்படி நான் கொடுக்கமாட்டேன் என்று சொல்லியுள்ளாரா என்பதைத்தான் நாம் பார்க்கவேண்டும்

பவுல் அவர்களுக்கு அனேக வெளிப்படுகளை தேவன் கொடுத்தார் அவரே தனது நிரூபத்தில் சில விஷயங்களை தேவன் வெளிப்படுத்துவார் என்று குறிப்பிட்டுள்ளார்.

எந்தக் காரியத்திலாவது நீங்கள் வேறே சிந்தையாயிருந்தால், அதையும் தேவன் உங்களுக்கு வெளிப்படுத்துவார். (பிலி
அந்தப் பிரசன்னமாகுதலை தேவன் தம்முடைய காலங்களில் வெளிப்படுத்துவார்,(தீமோ )
அங்கே உட்கார்ந்திருக்கிற மற்றொருவனுக்கு ஏதாகிலும் வெளிப்படுத்தப்பட்டால்,
( கொரி )

இவ்வசனங்களுக்கு வேறு எதவாது வியகீனம் நினைத்தால் நான் பொறுப்பல்ல ஆனால் புதிய ஏற்பாட்டில் தேவன் எதுவும் வெளிப்படுத்த மாட்டார் என்று நினைப்பது தவறான ஒரு வாதம். சிறிய காரியமானாலும் பெரிய காரியமானாலும் அது வசனந்தின்படி இருந்தால் அது தேவ வெளிப்பாடுதான்.

சகோதரர் எழுதியது
இதைக்குறித்துதான் பிற்கால‌த்தில் ஆளாளுக்கு 'த‌ரிச‌ன‌ம்' கொடுத்து ஜ‌ன‌ங்க‌ளை, கூடுமானால் தெரின்துகொள்ள‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளையும் 'வ‌ஞ்சிக்க‌த்த‌க்க‌தாக‌' பெரிய‌ அற்புத‌ அடையாள‌ங்க‌ள் செய்வான்(மேற்படிநபர்) என்று எச்ச‌ரித்திருக்கிறார்.

நீங்கள் சொல்லும் வசனம் இதோ:
ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். (மத

ஒருவரை வஞ்சிப்பது என்றால் என்ன?
வேத வார்த்தைகளை புரட்டி மனிதர்களை வேதத்தை விட்டு வழி விலக செய்வது. வேதத்தில் உள்ள ஒற்றை இல்லை என்று வாதிடுவது.

ஆனால் வேதத்தில் உள்ளதுபோல் நரக பாதளம் என்றும் அக்கினி கடல் என்றும் இடங்கள் இருக்கிறது எனவே மனிதர்கள் நிச்சயம் ஆண்டவரின் வார்த்தைகளின் படி நடக்கவேண்டும் என்பதுதான் எனது வாதம். இதில் என்ன வஞ்சிப்பு இருக்கிறது என்று சொல்கிறீர்கள்?. நான் என்ன அற்புத அடையாளமா செய்ய சொல்கிறேன் அல்லது செய்துகொண்டு இருக்கிறேனா?

நீங்கள்தான் அதற்க்கு அருத்தம் வெறும் கல்லறை அல்லது குழிதான் என்று மாற்றி சொல்கிறீர்கள்.

சகோதரர் எழுதியது:
அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள்

இங்கு தரிசனம் கட்டப்படும் என்று சொல்வது கடைசி நாட்களில் என்று தான் குறிப்பிடப்படுள்ளது நாம் வாழ்வது கடைசி நாட்களே. ஆண்டவரே அரசாட்சி செய்யும் ஆயிரம் வருட அரசாட்சியில் தரிசனம் சொப்பனம் எல்லாம் கிடையாது தேவையும் இல்லை . பூமி முழுவதும் கர்த்தரை அறியும் அறிவினால் நிறைந்திருக்கும்.

சகோதரர் எழுதியது:
காணாம‌ல் விசுவாசிப்ப‌து ம‌ட்டுமே விசுவாச‌ம், அப்ப‌டியென்றால் தேவ‌ன் எல்லாருக்குமே த‌ரிச‌ன‌ங்க‌ளைக் கொடுத்து முழு உல‌க‌த்தையும் இர‌ட்சிக்க‌லாமே. ஒரு அத்வானிக்கு த‌ரிச‌ன‌ம் கொடுத்தால் முழு இந்துக்க‌ளும் மாற‌லாமே?

காணாமல விசுவாசிப்பது மட்டும்தான் விசுவாசம் என்றால் ஆண்டவரின் வார்த்தைகளை கேட்டு விசுவாசித்த பவுல், ஆண்டவரின் கரங்களை தொட்டு பார்த்து விசுவாசித்த தோமா தேவதூதன் சொல்லை கேட்டு பேதுருவை அழைத்த கொர்நேலியு இதெல்லாம் விசுவாசம் இல்லையா?

இயேசுவின் சீடர்களே இயேசுவின் மரணத்துக்கு பின் மீன் பிடிக்க சென்று விட்டனர் இயேசு மீண்டும் அவர்களுக்கு தரிசனமாகிதான் அவர்களை திருப்பினார். இதில் காணாத விசுவாசம் எது?

ஆண்டவருக்காக உழியம செய்த கார்மைக்கேல் அம்மையார், சாது சுந்தர்சிங்க் இன்னும் தயங்காது தன் உயிரை ஈன்ற எந்த பெரிய உளியரனாலும் அவருக்கு நிச்சயம் தரிசனம் உண்டு. அவர்கள் வாழ்க்கை வரலாற்றை படித்து பாருங்கள். தரிசனம் இல்லாமல் யாரும் தலையை கொடுக்க முன்வரமாட்டார்கள். பவுல் அவர்கள் செய்த மகா தியாகத்துக்கு அவர் தரிசனமே காரணம்.

நீங்கள் என்னவென்றால் எல்லா பெரிய தேவ மனிதர்களும் பொய்யர்கள் நான் நினைப்பது மட்டும்தான் உண்மை என்பதுபோல் சொல்கிறீர்கள்.

அத்வானிக்கு தரிசனம் கொடுத்தால் அவர் மாறி ஆண்டவரை ஏற்றுக்கொள்ளாம் ஆனால் அவர் நான் இப்படி தரிசனம் கண்டேன் எல்லோரும் மாறுங்கள் என்றால்
எல்லோரும் அவரை கல் எரிவார்களே தவிர யாரும் மாற மாட்டார்கள். நான் பார்த்தவைகளை அழுது அழுது சொல்லியும் என் உயிர் நண்பனே நம்பவில்லை அப்படி இருக்க இயேசு சொனதுபோல் மரித்தவன் எழுந்து வந்து சொன்னாலும் யாரும் நம்பபோவதுஇல்லை. காரணம் மனிதனுக்குள் இருக்கும் பிசாசு அவனை நம்பவிடுவது இல்லை.


சகோதரர் எழுதியது:

"ஆகவே அவரது 'வார்த்தை'யைத்தவிர‌ வேறெதையும் நாம் தேட வேண்டிய அவசியமே இல்லை. உம‌து வ‌ச‌ன‌மே ச‌த்திய‌ம் ஆகையால் நாம் எல்லாவ‌ற்றுக்கும்எழுதப்பட்ட‌ வ‌ச‌ன‌த்தை மாத்திர‌மே சார்ந்திருக்க‌ வேண்டும்."

நானும் அதை தான் சொல்கிறேன் அவர் வார்த்தை சத்தியம், அவர் வேதனை உள்ள இடம் என்றால் அப்படி ஓன்று இருக்கிறது என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும் அவர் அவியாத அக்கினி என்று சொன்னால் அதையும் அப்படிதான் எடுக்கவேண்டும் அதற்க்கு மாற்று கருத்து எடுக்கவேண்டாம். அவர் வாய் தவறி எதுவும் சொல்ல மாட்டார் தேவை இல்லாமல் நம்மை பயம் கட்டவும் மாட்டார்.

சகோதரர் எழுதியது:
நண்பரே ஆத்துமாக்கள் அடுக்கிவைக்கப்பட்டுள்ளன என்பது உங்கள் கற்பனையே. மண்ணான மனிதன் மண்ணுக்குத்திரும்பி பூமியின் தூள் ஆகிறான். ஆத்துமாக்கள் வேதனைப்ப‌டுவதாக வேதத்தில் எங்குமே இல்லை. 'நரகபாதளமும்' உங்கள் கண்டுபிடிப்பே,

மரிக்கும் ஆத்துமாக்கள் பாதாளத்தில் குழியில் இறங்குகின்றன என்று அனேக வசனங்கள் சொல்கின்றன தாவீது கூட "என் ஆத்துமாவை பாதாளத்தில் விடீர் என்றும் கர்த்தர் என் ஆத்துமாவை பாதாளத்தின் வல்லடிக்கு தப்புவிப்பார் என்றும் சொல்லியுள்ளார்.

இப்படி பாதாளத்தில் இறங்கும் ஆத்துமாக்கள் எப்படி இருக்கும் என்று கீழ்க்கண்ட வசனம் சொல்கிறது:

சத்துரு என் ஆத்துமாவைத் தொடர்ந்து, என் பிராணனைத் தரையோடே நசுக்கி, வெகுகாலத்துக்குமுன் மரித்தவர்கள்போல் என்னை இருளில் இருக்கப்பண்ணுகிறான். (சங்:143:3)

மேலும் "பாதாளத்தின் நடவில் இருந்து பேசுவார்கள்" என்றும் வசனம் சொல்கிறது
இப்படியெல்லாம் இருக்கும் பொது ஒன்றன் மேல் ஒன்றாக சத்துரு அடுக்கி வைத்துள்ளான் என்ற வார்த்தை கற்பனை என்று நினைத்தால் நான் பொறுப்பல்ல

மேலும் நரக பாதாளம் என் கற்பனை அல்ல கீழ்க்கண்ட வசனம் பாருங்கள்

ஆயினும் மரித்தவர்கள் அவ்விடத்தில் உண்டென்றும், அவளுடைய விருந்தாளிகள் நரகபாதாளங்களில் கிடக்கிறார்களென்றும் அவன் அறியான். (நீதி:9:௧௮)

இதற்க்கு மேல் எனக்கு வசனம் தேட நேரம் இல்லை முடிந்தால் பிறகு எழுதுகிறேன்.

Ignatius Elango said...

ஒரு புதிய விவாதத்தை முன் வைக்கிறேன். கிறிஸ்தவர்களுக்கும் மற்றவர்களுக்கும் மிகவும் அவசியமும் முக்கியம் வாய்ந்த ஒரு தலைப்பு தான் இது.

"ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்." மத்.24:14 என்றார் நம் மீட்பர் இயேசு கிறிஸ்து

தேவனுடைய ராஜ்யம் என்றோ, பரலோக ராஜ்யம் என்றோ, நாம் வேதத்தில் நிறையவே வாசித்திரிக்கிறோம். இந்த ராஜ்யங்களை குறித்து நன்பர்கள் பதியலாமே! இன்று ராஜ்யத்தின் சுவிசேஷம் பூலோகமெங்கும் சென்று இருக்கிறதா? கிறிஸ்தவர்களான நாம் இந்த ராஜ்யங்களை குறித்து என்ன அறிந்திருக்கிறோம் என்பதையும் இந்த பகுதியில் பதியலாமே!! ஆவலுடன் பதிவுகளை எதிர்ப்பார்க்கிறேன்.

Ignatius Elango said...

அது ஏன் சகோதரரே ஒரு சிலருக்கு மாத்திரம் இப்படி பரலோக நரக தரிசனம் கிடைக்கிறது. தேவன் இப்படி நரகம் பரலோகம் கான்பித்து தான் மக்கள் மனம் மாற வேண்டுமென்றால், இந்த தரிசனங்கள் ஏன் அனைவருக்கும் தேவன் கொடுப்பதில்லை. உங்களை விடுங்கள், அப்போஸ்தலர்களுக்காகவாவது இப்படி பரலோக நரக தரிசனங்களை தெளிவாக கொடுத்திருந்தால் வேதத்தில் அதை தெளிவாக கொடுத்திருந்திருப்பார்கள், என்னை போல் வார்த்தைகளை மாத்திரம் விசுவாசிக்கும் கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலர்களின் வார்த்தைகள் விசுவசிக்கும் படியாக இருந்திருக்குமே, நான் மனிதர்களின் தரிசனங்களை நம்புவதை பார்க்கிலும், என் தேவன் தந்த வேதத்தில் உள்ள வார்த்தைகளையே மாத்திரம் விசுவசிக்கிறேன்.
Br please delete my last comment as that was for TC.com. Thanks and regards