Friday, December 28, 2007

மரணம் ஜெயிக்க முடியாதது அல்ல! (1)

தேவனாகிய கர்த்தர் 1992ஆம் ஆண்டு அடியேனை தனது வல்லமையின் ஆவியினால் இரண்டு முறையாக மொத்தம் 7 நாட்கள் அபிஷேகித்து வேதத்தில் உள்ள அனேக ரகசியங்களை தெரியப்படுத்தினார்.அந்த சமயங்களில் ஒருமுறை என் உடம்பு மட்டும் பூமியில் இருக்க என் ஆத்தும சரீரத்தில் இருந்த நான் தாழ்ந்த பாதளம் வரை சென்று அங்கு ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள மரித்த ஆத்துமாக்களை அப்படியே நேரில் பார்ப்பது போல பார்த்து அவற்றின் வேதனையை அனுபவித்தேன். அத்தோடு இன்னொருமுறை என்னை நரகத்தில் உள்ள கொதிக்கும் எண்ணெய் கொப்பரை ஒன்றில் தூக்கி போட்டுவிட்டார்கள். கொதிக்கும் எண்ணெய் கொப்பரை ஒன்றில் போடப்பட்ட மனிதன் எப்படி துடிப்பானோ அதுபோல பூமியில் கிடந்த என் மாமிசம் துடித்து அங்கும் இங்கும் துள்ளி கை கால்களில் அனேக அடிபட்டு காயம் ஏற்பட்டு அனேக நாட்கள் ஆராமல் இருந்து. நான் நரகத்தில் விழுந்தேன், நரகத்தை பார்த்தேன் என்று சொன்னதை யாரும் நம்பவில்லை. எனக்கு பயித்தியம் பிடித்துவிட்டு என்று நினைத்து இரஜாவூர் என்னும் ஒரு உரில் உள்ள RCசர்ச் ஒன்றில் கை கால்களில் சங்கிலியால் கட்டி சுமார் ஒரு மாதம் போட்டுவிட்டார்கள்.
.
நரகம் பாதாளத்தை நேரில் பார்த்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாத நான்."ஆண்டவரே அந்த கொடூரமான நரகத்துக்கு யாரும் போகக்கூடாது, அங்கு ஒருவர் போய் வேதனை பட்டாலும் என்னால் தாங்கமுடியாது என்று சொல்லி அனேக நாட்கள் இறைவனிடம் மிகுந்த பாரத்தோடு கண்ணீர் சிந்தி கெஞ்சினேன். அப்பொழுது இறைவன். மொத்த மனித வர்க்கத்தின் மீட்புக்கும் வழி உள்ளது என்றும் ஆனால் அது மிக கடினமான வழி என்றும். சக மனிதர்களே யாரையும் அதில் நடக்க விடாமல் தடுத்து விடுவார்கள் என்றும் சொல்லியதோடு, "மனிதன் மரணம் இல்லாமல் வாழவும் பைபிளில் வழி சொல்லப்பட்டுள்ளது " என்றும் "கேருபின்களாலும், வீசும் சுடரொளி பட்டயத்தாலும் பாதுகாக்கப்பட்டிருக்கும் ஜீவ விருட்சத்தை" அடைவதர்க்கான வழி எது என்பதையும் தெளிவாக தெரியப்படுத்தி உள்ளார்.
.
உலகத்தின் முடிவும், சாத்தானின் அழிவும், மொத்த மனித வர்க்கத்தின் மீட்பும் அங்கேதான் இருக்கிறது என்று இறைவன் தெரியப்படுத்தி உள்ளதால், அது அறிந்துகொள்ள முடியாதபடி சாத்தானால் மறைக்கப்படுள்ளது. அவர் தெரியப்படுத்திய அந்த கடினமான வழியில் நடந்து அந்த இலக்கை அடைவதர்க்காக கடந்த 16வருடமாக முயன்று வருகிறேன். விருப்பம் இருந்தால் நீங்களும் முயற்சி பண்ணி பாருங்களேன். எப்படியாவது ஒருவரும் நரகம் போகக்கூடாது என்பதுதான் என்னுடைய வாஞ்சை அதுதான் இறைவனின் வாஞ்சையும் கூட!
.
யாரும் இதை நம்புகிறீர்களோ இல்லையோ எனக்கு அதைப்பற்றி கவலை இல்லை. என்னை அழைத்த தேவனை நான் அறிந்திருக்கிறேன் அவர் காட்டிய இலக்கையும் நான் அறிந்திருக்கிறேன் எல்லாமே என் கண் முன்னால் ஒரு அழியாத படம் போல தெளிவாக உள்ளது. அகவே ஆபிரகாம், ஏன்? எதற்கு? எப்படி? என்று கேள்வி கேட்டுக்கொண்டு இருக்காமல் அவன் சொந்த தேசத்தை விட்டு புறப்பட்டு போனது போல இந்த மாய உலகத்தின் எல்லா காரியங்களிலும் இருந்து விடுபட்டுக்கொண்டே போகிறேன். நிச்சயமாகவே ஒரு முடிவு உண்டு
.
உம்முடைய நீதியை நான் என் இருதயத்தில் மறைத்து வைக்கவில்லை...... உம்முடைய கிருபையையும் உமது உண்மையையும் மகா சபைக்கு அறிவியாதபடி நான் ஒளித்துவைக்கவில்லை (சங்:40;10) என்ற வார்த்தைக்கு இணங்கியும்,
.
நாளை இறைவன் முன்னால் நியாய தீர்ப்புக்காக நிக்கும்போது "எனக்கு இப்படி ஒரு வழி இருந்தது தெரியவே தெரியாதே" என இறைவனிடம் சொல்ல கூடாது என்பதற்க்காக இறைவன் இதை எழுதி வெளியிடும்படி சொன்னதால் வெளியிடுகிறேன். எல்லாவற்றிற்கும் வசன ஆதாரமும் தருகிறேன் உங்களால் முடிந்தால் நீங்களும் முயற்சி பண்ணலாம். இறைவன் பச்சபாதம் உள்ளவர் அல்ல. யார் சரியாக நடந்தாலும் ஜீவ விருட்சத்தின் கனியை பெற முடியும்.
.
மேலும் இந்த வார்த்தைகள் உங்களுக்கு தவறானவை போல தெரியுமானால் நீங்கள் இறைவனிடம் அமர்ந்து ஜெபம்பண்ணி இதன் உண்மை தன்மையை அறிந்து கொள்ளலாம். ஆனால் விட பிடியாக ஜெபித்து கேட்க வேண்டும். சாதாரண ஜெபத்தால் இதன் உண்மை தன்மையை அறிந்து கொள்ள முடியாது
(இதில் எழுத்து பிழைகள் இருந்தால் தயவு செய்து மன்னிக்கவும்)
.
பைபிளில் உள்ள வார்த்தைகள் இறைவனின் வார்த்தைகள்தான் என முழுமனதோடு நம்பும் உங்களுடன் அந்த வேத வார்த்தைகள் ஆதாரத்துடன் பேசுவது நல்லது என நினைக்கிறேன். ஏனென்றால் ஆண்டவர் இயேசுவை சோதித்த பிசாசானது வேத வார்த்தைகள் மூலமாகத்தான் சோதித்து என்பது எல்லோரும் அறிந்ததே! அதுபோல் நான் எழுதும் செய்தியில் எதாவது தவறு இருப்பதாக நீங்கள் நினைத்தால் சரியான வசன அதாரத்தோடு COMMAND பகுதியின் மூலம் கேள்வி கேட்கலாம். உண்மையில் தவறு எதுவும் இருக்குமானால் அதை நான் இறைவனிடம் அமர்ந்து விசாரித்து திருத்திக்கொள்வேன்.
.
இயேசு பூமிக்கு வந்து இரத்தம் சிந்தியத்தின் முக்கியமான நோக்கம்:
இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு வந்ததன் நோக்கம் என்ன என்று உங்களிடம் கேட்டால்
 • பாவத்தில் இருந்து மனிதனை ரட்சிக்க
  இழந்து போனதை தேட
  பிசாசின் தலையை நசுக்க.
  மரணத்தின் கூரை ஒடிக்க
  சபையை ஸ்தாபிக்க
  மனிதனை இறைவனோடு ஒப்புரவாக்க.
  மனிதனை பரலோக ராஜ்யம் அழைத்துச்செல்ல.
  பாதாளம் நரகம் இவற்றிலிருந்து மனிதனை மீட்க

போன்ற எத்தனையோ காரணங்களை சொல்லலாம். எல்லாம் உண்மைதான். ஆனால் அனேகருக்கு தெரியாமல் போன தெரியக்கூடாது என சாத்தான் மிகமிக தந்திரத்தோடு மறைத்து வைத்திருக்கும் ஒரு முக்கியமான நோக்கம் ஒன்று உண்டு. அதுதான் இதுவரை எல்லோரையும் ஆட்கொண்டுவரும் மாமிச மரணத்தையும் ஜெயித்து யாருமே அனுபவித்திராத மரணம் என்பதே இல்லாத நித்திய வாழ்க்கையை மனிதனுக்கு தர என்பது.
.
முதலில் மரணம் என்று இந்த உலகில் எதை சொல்கிறோம்?
.
நமது மாமிசம் இயக்க நிலையை முடித்து அது மண்ணில் அடக்கம் பண்ணப்படுவதைதான் உலகில் எல்லோரும் மரணம் என்று குறிப்பிடுகிறார்கள். அந்த "மரணம்" இல்லாமல் வாழ முடியும் என்று வேதம் வழி சொல்கிறது தவிர, ஒருவன் நான் இருக்கிற பிரகாரமாக அப்படியே இருந்துவிடுவான் என்ற பொருளில் அல்ல! அதாவது உலகத்தார் சாவதுபோல செத்து அடக்கம் பண்ணப்படுவதில்லை.
.
சரி இப்பொழுது பவுல் அவர்கள் 1 தெசே 4ல் இப்படி சொல்கிறார்
17. பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்"
.
இதில் உயிரோடு இருக்கும் நாமும் எடுத்துக்கொள்ளபடுவோம் என்று சொல்வது மரித்தா? அல்லது மரிக்காமலா? என்று பார்த்தால் கீழ் கண்ட வசனம் இப்படி சொல்கிறது
.
53 For our dying bodies must be transformed into bodies that will never die அதாவது நமது உடம்பு சாகாமையை தரித்துகொள்ளும் என்று. இங்கு என்ன நிகழும்? நமது மாமிசம் அப்படியே கீழே விழுந்து விடுமா, என்ன? இல்லை, அது அப்படியே சாகாத உடம்பாக மாறிவிடும்! என்பது தான் எனது வேதம் சொல்லும் கருத்து! அதாவது மனிதர்கள் சாவதுபோல நான் செத்துபோவதில்லை சாகாதவனாக மாறிவிடுவேன் என்று சொல்கிறேன்.
.
அதாவது
ஓன்று, மாமிசத்தில் மரித்தவர்கள் சாகாத உடம்புடன் எழுந்திருப்பார்கள். இன்னொன்று உயிரோடு இருக்கும் நான் சாகாமலேயே அப்படியே சாகாத உடம்பாய் மாறிவிடுவேன். அது முடியாது, நடக்காது என்று சொல்பவர்களுக்கு நடக்காது. நீங்கள் விசுவாசித்த படியே உங்களுக்கு நடக்கும் என்பதும் வேத வாக்கு!
.
மாம்சம் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியுமா?

"மாமிசமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிக்கமாட்டாது: என்று 1கொரி:15:50ல் சொல்லப்பட்டிருக்கும் போது அது எப்படி முடியும்? என்று நீங்கள் நினைக்கலாம். அதை பற்றி பின்னால் வசன ஆதாரத்தோடு விளக்குகிறேன்
ஆனால் ஒன்று மட்டும் உறுதி
.
உயிர்தெழுந்த இயேசு மாமிசத்தில்தான் வந்தார், அவரது கல்லரை இன்றுவரை திறந்தே உள்ளது மேலும் அவரே அவருடைய வாயாலே "நீங்கள் காண்கிறபடி மாம்சமும் எலும்பும் உண்டாயிருக்கிறது போல ஒரு ஆவிக்கு இராதே" என்று (லுக்:24:39)ல் சொல்லியதோடு அப்படியேதான் பரலோகம் ஏறி போனார் இதற்குமேல் ஒரு சாட்சி நமக்கு தேவை இல்லை என நினைக்கிறேன். மேலும் எலிசா, ஏனோக்கு இருவரும் மரணத்தை காணாமல் மாமிசத்தோடு தேவனிடம் போனதும் எல்லோருக்கும் தெரிந்ததே.
.
அத்தோடு சங்கீதம் 16:19ல் "என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கி இருக்கும்" என சங்கீதக்காரன் சொல்வதன் மூலம் மாம்சத்துக்கும் ஒரு நம்பிக்கை உண்டு என்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.
.
சாகவே சாவை x பிழைக்கவே பிழைப்பாய்
ஆதியில் தேவனாகிய கர்த்தர் மனிதனை மண்ணினால் செய்து அவனை பார்த்து "நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை புசிக்கும் நாளிலே நீ சாகவே சாவாய்" என ஆதாமிடம் சொன்னார். அதனால் தான் மரணம் என்ற ஒன்று (ஆவிக்குரிய மரணம் மற்றும் மாமிச மரணம் இரண்டுமே) இந்த பூமிக்குள் நுழைந்தது என்பது எல்லோருக்கும் தெரியும்.
.
அந்த சாகவே சாவாய் என்ற சாபத்துக்கு நேர் எதிர்பதமான வார்த்தை "பிழைக்கவே பிழைப்பாய்" என்பது, அது வேதத்தின் ஒரே ஒரு புத்தகத்தில் மட்டும்தான் 8முறை காணப்படுகிறது அதுதான் எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம்.
.
எப்படி தேவனின் சாகவே சாவாய் என்ற வார்த்தையின் வல்லமையால் ஆவிக்குரிய மற்றும் மாமிச மரணம் வந்ததோ அதேபோல் இந்த பிழைக்கவே பிழைப்பாய் என்ற வார்த்தையின் மூலம் ஆவிக்குரிய மற்றும் மாமிசத்துக்குரிய ஜீவன் கிடைக்கும் என்பது அதிக நிச்சயமல்லவா? எனேன்றால் தேவனின் வார்த்தை மிகவும் வல்லமை உள்ளது அதை குறைத்து கூட்டி எடை போட முடியாது.

.
மேலும் தேவனாகிய கர்த்தர் நீதிமான் என்ற வார்த்தைக்கு மிகவும் மதிப்பு கொடுத்து அவர்களுக்கு அனேக ஆசீர்வாதங்கள் சொல்லியிருப்பதை வேதத்தின் கிட்டத்தட்ட 150 வசனங்களில் காணலாம்.
உதாரணமாக
"நீதிமான்கள் பூமியை சுதந்தரித்துக்கொண்டு என்றைக்கும் அதில் வாசமாய் இருப்பார்கள்" (சங்: 37:29)
கர்த்தரின் நாமம் பலத்த துருகம், நீதிமான் அதற்குள் ஓடி சுகமாயிருப்பான் (நீதி: 18:10)
நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜியத்திலே சூரியனை போல பிரகாசிப்பார்கள் (மத்: 13:43)
போன்றவை
.
யார் அந்த நீதிமான்கள்? நீதிமான்கள் என்ற வார்த்தையின் சரியான அர்த்தம் என்ன? கர்த்தருடைய பார்வையில் யார் நீதிமான்?
.
WHAT IS THE CORRECT DEFINITION FOR RIGHTEOUS?
.

பல்வேறு கர்த்தருடைய தாசர்கள் பல்வேறு விளக்கங்களை கொடுத்தாலும்.
அதே எசேக்கியேல் தீர்க்கதரிசி புத்தகத்தில் கர்த்தரே தனது பார்வையில் யார் யார் நீதிமான் என தெளிவாக விளக்கமாக சொல்லியுள்ளார். ஆனால் நானும் எத்தனையோ போதனைகளை கேட்டுவிட்டேன், எவ்வளவோ புத்தகங்களை படித்துவிட்டேன் யாரும் இந்த முக்கியமான வசனங்கள் குறித்து எதுவும் சொல்வதில்லை. ஆகையால் இறைவனின் கட்டளைக்கு இணங்கி இதை வெளியிடுகிறேன். படித்து பயன்பெற்று மரணம் இல்லாமல் வாழ என வாழ்த்துக்கள்.
.
மரணமில்லா வாழ்க்கை நிச்சயம் உண்டு : .
முதலில் மரணமில்லா வாழ்க்கை உண்டு என்பது பற்றி பைபிள் எந்தெந்த இடங்களில் சொல்கிறது என பார்ப்போம்.

 1. ஆண்டவராகிய கர்த்தரால் மரணத்துக்கு நீங்கும் வழிகள் உண்டு (சங்:68:20)
 2. நீதியின் பாதையில் ஜீவன் உண்டு அங்கே மரணம் இல்லை (நீதி: 12:28)
 3. அவர் (கர்த்தர்) மரணத்தை ஜெயமாக விழுங்குவர் (ஏசா:25:8)
 4. அவர்களை மரணத்துக்கு நீங்கலாக்கி விடுவிப்பேன்; (ஓசி 13:14)
 5. என் கட்டளைகளின் படி நடந்து, என் நியாயங்களை கைக்கொண்டு உண்மையாக இருப்பானாகில் அவனே நீதிமான் அவன் பிழைக்கவே பிழைப்பான் (எசே:18:9)
 6. ஒருவன் என் வார்த்தையை கை கொண்டால் அவன் என்றென்றும் மரணத்தை காண்பதில்லை.(யோ:8:51)
 7. உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவன் எவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்(யோ:8:26)
 8. தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்பிப்பார் (ரோ: 8:11)

மனிதன் அப்பத்தினாலே மாத்திரமல்ல தேவனுடைய வாயில் இருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையாலும் பிழைப்பான் (மத:4:4) என வேத வசனம் சொல்லும் பட்சத்தில்,
.
இத்தனை முறை மனிதன் மரணமில்லாமல் வாழ வழி இருக்கிறது என இறைவன் சொல்லியும் அதை நம்பாமல் அதற்கு வேறு விதமாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருக்கும் அன்பான சகோதரனே! சகோதரியே! எத்தனையோ வேத ஆராய்ச்சியாளர்களுக்குகூட இந்த வார்த்தைகள் இத்தனை காலம் ஏன் கண்ணில் படவில்லை என்பது எனக்கே தெரியவில்லை.

.
வேதத்தை இறைவார்த்தை என உறுதியாக நம்பும் உங்களுக்கு இந்த எளிமையான அர்த்தம் உள்ள வசனங்களை நம்ப முடியவில்லையா? அல்லது புரியவில்லையா? அல்லது உலகத்தில் எல்லோரும் மரிக்கிறார்கள் அப்படி இருக்க இதில் இறைவன் எதோ தவறாக சொல்லிவிட்டார் என நினைக்கிறீர்களா?.
.
அன்பானவர்களே! இறைவன் என்றுமே தவறுவது இல்லை நடக்காததை சொல்வதுமில்லை. மனிதர்களாகிய நாம் தான் எங்கோ தவறு பண்ணுகிறோமே அன்றி வேறொன்றும் இல்லை. . ஆம்! மிகப்பெரிய ரகசியம் அதில் இருப்பதால் சாத்தான் எல்லோருடைய கண்ணையும் இத்தனை காலமாக கட்டி வைத்துவிட்டான் ஏனென்றால் அங்குதான் அவனின் முடிவும் இருக்கிறது, ஆனால் இனியும் அது முடியாது எனேன்றல் அவனது முடிவு காலம் மிகமிக நெருங்கி விட்டது! அகவே தான் கடந்த 15வருடங்களாக மறைத்து வைத்திருந்த அனேக காரியங்களை இறைவன் எல்லோருக்கும் வெளிப்படுத்தும்படி சொல்லிவிட்டார்.
.
இறைவனின் வார்த்தைகள் இத்தனை முறை மரணம் இல்லாமல் வாழ வழி உள்ளது என சொல்லியும் இதுவரை எந்த பரிசுத்தவானும் ஏன் அப்போஸ்தலர்கள் கூட அப்படி வாழவில்லையே அவர்கள் எல்லோருமா தவறி விட்டார்கள் என கேள்வி எழலாம்.
.
வேதம் மிகபெரிய ரகசியங்கள் நிறைந்தது:-
நாம் ஒரு முக்கியமான விஷயத்தை அறிந்து கொள்ளுதல் நல்லது என நினைக்கிறேன். அதாவது இறைவனின் அறிவு ஞானம் எல்லாம் நம்மால் கணக்கிட்டு சொல்ல முடியாது. மேலும் இந்த உலகின் அனாதி ரகசியங்கள் எதுவும் நமக்கு தெரியாது. பாம்பு ஆதாமை வஞ்சித்தது, அந்த சர்ப்பத்துக்கு வஞ்சிக்கும் தன்மை எங்கிருந்து வந்தது அல்லது லூசிபருக்கு இறைவனை போல ஆகவேண்டும் என்ற எண்ணம் வர யார் காரணம்?. இறைவன் எல்லோரையும் நல்லவராகத்தனே படைத்திருப்பார் அப்படி இருக்க தீமை எப்படி உள்ளே வந்தது? போன்ற கேள்விக்கு பதில் தெரியாது.
.
இறைவன் ஒரு மனிதனை தெரிந்துகொள்ளும் போது ஒரு குறிப்பிட்ட காரியத்துக்காக தெரிந்து கொள்கிறார். அதை சரியாக செய்து பலபேர் தனது வாழ்க்கையை முடிக்கின்றனர் (நோவா, தானியேல், யோபு, இயேசு, பவுல்) ஆனால் தனக்கு கிடைத்த மிக பெரிய பொக்கிஷமான கர்த்தரின் அழைப்பை அசட்டை பண்ணி வாழ்க்கையை முடித்துக்கொண்டவர்களும் உண்டு (சிம்சோன், சாலமோன், கேயாசி, எத்தனையோ ராஜாக்கள், யூதாஸ் போன்றவர்கள்) அதற்காக அவ்வளவுதான் கர்த்தரின் வழிகள் என நாம் முடிவு எடுக்க முடியாது. அவரிடம் இன்னும் எத்தனையோ புது புது வழிகள் உள்ளன. நாம் யாரும் அதில் அக்கறை செலுத்தி அதை அறிந்து கொள்ள விரும்புவது இல்லை. மேலும் இறைவன் எல்லோருக்கும் எல்லா ரகசியங்களையும் தெரியப்படுத்துவது இல்லை. ஒரு மனிதனுக்கு ஒரு ரகசியத்தை தெரியப்படுத்தினால் அவன் அதை சரியாக பின்பற்றி தனது நோக்கத்தை எந்த அளவுக்கு நிறைவேற்றுவான் என்பதை எல்லாம் அறிந்து அதற்கு தகுந்த மாதிரித்தான் வெளிப்படுத்துவார். பன்றிகள் முன் முத்தை போட்டால் அதனால் பயன் ஏதும் இல்லை என்பது அவருக்கு முன்கூட்டியே தெரியும்.
.
வேதத்தில் மிக பெரிய ரகசியங்கள் எல்லாம் இருப்பதால் தான் சங்கீதகாரன் அவற்றை புரிந்துகொள்ளும் அறிவை கேட்டிருக்கிறான். மிகவும் வாஞ்சையோடு கேட்டு புலம்பி, குழம்பி பெருமுச்சுவிட்டு அழுகிறவர்களுக்குதான் அவைகள் வெளிப்படுத்தப்படும்.
.
பரலோகம் போகும் கூட்டமா, நரகம் போகும் கூட்டமா யார் அதிகம்?

மனம் திரும்பினோம், இயேசுவை ஏற்றுகொண்டோம், பரிசுத்த ஆவியை பெற்றுகொண்டோம், ஜெபம் பண்ணுவோம், உழியம் செய்வோம், சபைக்கு போவோம், காணிக்கை போடுவோம், எப்படியாவது கஷ்டப்பட்டு வாழ்ந்து பரலோகம் பொய் சேர்ந்துவிடுவோம் என்பது அநேகரின் செயலாக உள்ளது அதிலும் அநேகர் இந்த உலக காரியங்களுக்காகத்தான் இறைவனையே தேடுகின்றனர். இன்னும் கொஞ்சம் அதிகமாக செய்பவர்கள் பேய் பிசாசை விரட்டுவார்கள், அதிசய அற்புதம் செய்வார்கள், சுகமக்குவார்கள் அவ்வளவு தான்.
.
சரி ஆதி அப்போஸ்தலரான தோமாவால் சுவிசேஷம் சொல்லப்பட்ட நமது இந்தியாவை எடுத்துக்கொள்வோம் கடந்த 2000 வருடத்தில் என்ன சாதித்துவிட்டோம். இந்திய மக்கள் தொகையில் 5% கூட கிறிஸ்தவர்கள் இல்லை. ஒரு ஆத்துமாவை கிறிஸ்துவுக்குள் கோண்டுவர நாம் படும் கஷ்டம் என்ன? அதே நேரத்தில் எத்தனையோ புறஜாதி குழந்தைகள் இந்த பூமியில் பிறந்து விடும்.
.
கிறிஸ்தவ நாடுகள் என்று சொல்லப்படும் தேசங்கள் எல்லாம் மிகவும் முன்னேறி கிறிஸ்துவையும் கடந்து எங்கேயோ போய்விட்டார்கள். ஆபாச இணையதளங்கள், இறைவன் வெறுக்கும் ஹோமோ செக்ஸ் மற்றும் காமகளியாட்டங்கள் எல்லாம் அங்குதான் நடக்கிறது. தான் கெட்டது போதாது என்று அதன் மூலம் உலத்தையே பாவத்துக்குள் வழிநடத்துகின்றனர் . பவுல் அடியார் ஆரம்பித்த கொரிந்து சபையில் அவர் இருக்கும்போதே பிரிவினைகள் பேதங்கள் எல்லாம் ஏற்பட்டுவிட்டதை அவர் எழுதியுள்ளார்.
.
ஏன் நமது நாட்டில் கூட உள்ள ஊழியர்களை கூட சில கேள்விகள் கேட்போம்:-

 • சொந்த சபை வைத்திருப்போர் எத்தனைபேர் அதன் பொறுப்பை தனக்குப்பின் சபையில் உள்ள வேறொரு மூப்பரிடம் ஒப்படைக்க முன்வருவார்கள்.

 • இறைவன் உங்களிடம் இந்த சபையை அப்படியே வேறொருவருக்கு கொடுத்துவிட்டு வேறு இடம் போய் புதிதாக உழியம் செய்யசொன்னால் செய்ய தயாரா?

 • தன் சபையில் புதிதாக வந்த ஒரு சதாரண விசுவாசியின் வார்த்தைகளை முழு மனதோடு ஏற்றுக்கொண்டு அதற்கு கீழ்படிய முடியுமா?

 • தன் சபையில் 1ரூபாய் காணிக்கை போடும் ஒரு விசுவாசியின் வாழ்க்கைத்தரத்தை விட குறைந்த வாழ்க்கை தரத்தில் வாழ முடியுமா?

ஒரு 10 விசுவாசி உள்ள சபையின் பாஸ்டருக்கு கூட தான் பாஸ்டர் என்ற லூசிப்பரின் பெருமை வந்து விடுகிறது. இயேசுவை அறிந்த மக்களே அநேகர் வழி தவறி போய்கொண்டு இருக்கின்றனர். இதே நிலைமையில் போனால் பரலோகம் போகும் கூட்டத்தை விட நரகம் போகும் கூட்டம்தான் அதிகமாக இருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
.
இதுதான் இறைவனின் முடிவான திட்டமாக இருக்கும் என நினைக்கிறீர்களா?

இல்லவே இல்லை! ஒருவரும் கெட்டு நரகம் போகக்கூடாது என்பதுதான் இறைவனின் மன விருப்பம். ஒரு ஆத்துமா நரக அக்கினியில் கிடந்தது துடித்தாலும் அதை இறைவன் சகித்துக்கொண்டு இருப்பவர் அல்ல! அதை இறைவன் பலமுறை என்னிடம் சொல்லிவிட்டார் இதை எழுதிம்போதே கண் கலங்குகிறேன்.
.
அதற்காக நான் சுவிசேஷம் சொல்லக்கூடாது உழியம் செய்யக்கூடாது என சொல்லவரவில்லை. நடைமுறை கிறிஸ்த்தவ உளியங்கள் மற்றும் செயல்பாடுகள் எல்லாமே இயேசு எதிர்பார்க்கும் ஒன்றுதான் அதில் ஏதும் மாற்றம் இல்லை! நாம் கண்டிப்பாக இயேசுவைபற்றி பிறருக்கு சொல்லவேண்டும் அது இறைவனின் கட்டளை. ஆனால் தற்போது உள்ள கிறிஸ்தவ நடவடிக்கைகள் மூலம் எல்லோரையும் மீட்பது சாத்தியமா?
.
ஆனால் எல்லோரையும் நரகஅக்கினியில் இருந்து மீட்பது சாத்தியம் என்றும் அதற்கான வழியையும் சேர்த்தே இயேசு ஏற்படுத்தியுள்ளார் என்றும் அது திறந்தே இருக்கிறது ஆனால் அது யார் கண்ணுக்கும் தெரியவில்லை என்றும் இறைவன் வெளிப்படுத்தியுள்ளார்.

தொடர்ச்சி.....பாகம் ௨

No comments: